டாடாவின் கண்காணிப்பில் உருவாக்கப்படும் புது சைக்கிள் இதுதான்!! விலை எவ்வளவுனு தெரிஞ்சா உடனே புக் பண்ணிடுவீங்க!
டாடா குழுமம் (Tata Group)-இன் கீழ் இயங்கும் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் என்ற சைக்கிள் உற்பத்தி நிறுவனம் மார்க்கெட்டில் 'காண்டினோ நாய்சி பாய்' என்ற பெயரில் புதிய சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மற்ற சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில், இந்த காண்டினோ நாய்சி பாய்-இல் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் பார்ப்போம்.
பெரிய, பெரிய மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்கள் கூட இன்றைய காலத்தில் சைக்கிள் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்புகின்றனர். அந்த அளவிற்கு, சைக்கிளிங் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் பரவியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு, சைக்கிள் உற்பத்தியில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனம் ஸ்ட்ரைடர் ஆகும்.

இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக காண்டினோ நாய்சி பாய் என்ற அட்வென்ச்சர் ரக சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சைக்கிளின் அறிமுக விலையாக ரூ.12,995 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெர்ஃபார்மன்ஸ், ஸ்டைலில் சிறந்து விளங்கும் வகையில் காண்டினோ நாய்சி பாய் சைக்கிள் உருவாக்கப்பட்டு உள்ளதாக ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் நிறுவனம் கூறுகிறது.
அளவில் சற்று சிறியதாக தெரிந்தாலும், இந்த சைக்கிளை எவரொருவரும் பயன்படுத்தலாம் எனவும் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் உறுதியுடன் கூறுகிறது. அதாவது, முதல்முறையாக சைக்கிள் ஓட்டுபவர்களில் இருந்து தொழில்முறை சைக்கிளிங் வீரர்கள் வரையில் ஸ்ட்ரைடர் சைக்கிளை ஓட்டலாமாம். இந்த சைக்கிளில் பி.எம்.எக்ஸ் ஹேண்டில்பார்ஸ் பொருத்தப்பட்டு உள்ளன.

சைக்கிளை இயக்க 360-டிகிரி ஃப்ரீ-ஸ்டைல் ரோட்டார் உள்ளது. சிறந்த கண்ட்ரோல் மற்றும் செயல்படுதிறனுக்காக ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் பாகங்களை கொண்டு, உற்பத்தி நுணுக்கங்களில் இந்த சைக்கிளை ஸ்ட்ரைடர் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் மெட்டீரியல்களில் முக்கியமானதாக இந்த சைக்கிளின் யு-பிரேக்குகளை சொல்லலாம். ஏனெனில், இவை சிறப்பான கண்ட்ரோலை வழங்கும் என ஸ்ட்ரைடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின் இருக்கை பயணி கால் வைத்துக் கொள்வதற்கான பெக்ஸ் சைக்கிளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. காண்டினோ நாய்சி பாய் சைக்கிளின் அறிமுகத்தை கொண்டாடும் விதமாக இந்த சைக்கிளுக்கு குறுகிய கால சலுகையை ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.4,335 வரையிலான பணத்தை இந்த சைக்கிளை வாங்கும்போது சேமிக்க முடியும்.

அத்துடன், தனது நிறுவனத்தின் எந்தவொரு சைக்கிளை வாங்கினாலும் ரூ.3,500 மதிப்புள்ள பரிசுப் பொருளையும் ஸ்ட்ரைடர் வழங்குகிறது. ஆனால், இதற்கு நீங்கள் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது அமேசான் ஷாப்பிங் செயலி மூலமாக ஸ்ட்ரைடரின் சைக்கிளை வாங்க வேண்டும்.
இதுகுறித்து ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வணிக முதன்மை அதிகாரி ராகுல் குப்தா கூறுகையில், "இந்தியாவில் பி.எம்.எக்ஸ் ரைடிங் பந்தயங்கள் பிரபலமாகுவது அதிகரித்து வருவதால், இவை உற்சாகமான நேரங்களே. நாய்சி பாய் சைக்கிள்கள் துல்லியமாகவும், கவனத்துடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதிநவீன பொருட்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்களை பயன்படுத்தி, ஒவ்வொரு பைக்கும் ஒப்பிட முடியாத செயல்திறன் மற்றும் நீடித்துழைப்பை வழங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ட்ரைடரின் நாய்சி பாய் சைக்கிள் ஆனது அட்வென்ச்சர் பயணங்களுக்கு மிகவும் சரியானது என சொல்லலாம். அதாவது, கரடு முரடான பாதைகளில் இத்தகைய சிறிய அளவிலான சைக்கிள்கள் ஹேண்ட்லிங் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். ஸ்ட்ரைடரின் காண்டினோ நாய்சி பாய் சைக்கிளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









