ஏகே62 அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்காக புதிய தகவலை வெளியிட்ட அஜீத் மேலாளர்! மனுஷன் இப்படி இறங்கிட்டாரு!
அஜீத் குமாரின் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திரைப்படமாக ஏகே 62 இருக்கின்றது. இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை பெரிய அளவில் வெளியிடாமல் படக் குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஓர் சுவாரஷ்யமான தகவல் ஸ்டார் ஆக்டர் பற்றி தற்போது வெளியாகி இருக்கின்றது.
படங்களில் நடிப்பதைக் காட்டிலும் வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் அஜித் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் ஏகே 62 திரைப்படம் நிறைவுற்ற உடன் அஜீத் குமார் மீண்டும் ஓர் வேர்ல்டு ட்ரிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முறையும் பைக்கிலேயே அவர் தனது வேர்ல்டு ட்ரிப்பை மேற்கொள்ள இருக்கின்றார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது ஆகும். இந்த தகவலை அஜீத் குமாரின் மேலாளரும், செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா, அவரது ட்விட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். நடிப்பை போலவே வாகனங்கள் மீதும் தீராத காதல் கொண்டவராக அஜீத் குமார் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்கு சான்றாக நடிகர் இடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் ஆடம்பர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, சில அரிய வகை வாகனங்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே வாகன ரைடுகளிலும் தான் மிகுந்த ஆர்வமிக்கவன் என்பதை பைக் ரைடுகள் வாயிலாக நடிகர் வெளிக்காட்டி வருகின்றார்.
சமீபத்தில்கூட தன்னுடன் நடித்த நடிகை மஞ்சு வாரியர் மற்றும் இன்னும் பல நடிகர்கள் உடன் இணைந்து லே மற்றும் லடாக்கிற்கு பைக் ரைடை அவர் மேற்கொண்டார். துணிவு திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த பயணத்தை நடிகர்கள் மேற்கொண்டனர். இதற்கு முன்னதாக அஜித் சோலோவாக வேர்ல்டு டூராக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு பைக் பயணத்தை மேற்கொண்டார்.
இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகின. இந்த நிலையிலேயே மீண்டும் ஓர் புதிய பயணத்தை நடிகர் அஜீத் குமார் தொடங்க இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தி இருக்கின்றார். வெகு விரைவில் அஜீத்தின் ஏகே 62 திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
அடுத்து வரும் பண்டிகை நாள் ஏதேனும் ஒன்றில் இது வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் இந்த திரைப்படத்தின் முக்கிய பணிகள் பிப்ரவரி 20 ஆம் தேதி உடனேயே முடிவுற்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
விரைவில் படத்தின் பெயர் உறுதி செய்யப்பட்ட பின்னர் ஏகே 62 பற்றிய அனைத்து முக்கிய தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே விரைவில் பைக்கிலேயே உலகை சுற்றி வர அஜீத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின்போது அவர் பிஎம்டபிள்யூ பைக்கையே பயன்படுத்தினார்.
இந்த முறை பயணத்தின்போதும் அவர் அதே பிஎம்டபிள்யூ பைக்கையே பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை. பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் பைக்கையே அவர் பயன்படுத்தினார். இதன் மதிப்பு ரூ. 22.5 லட்சம் ஆகும். 1254 சிசி, 2 சிலிண்டர் எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இது 136 பிஎஸ் பவரை 7,750 ஆர்பிஎம்மிலும், 143 என்எம் டார்க் திறனை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இந்த பைக்அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், கரடு-முரடு என எந்த மாதிரியான பாதையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த பைக் ஆகும். எனவேதான் இந்த பைக்கை தனது பயணத்திற்கு அஜீத் குமார் தேர்வு செய்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








