சுஸுகி ஆக்ஸஸை இந்த நிறத்தில் யாரும் வைத்திருக்க மாட்டார்கள்!! மார்க்கெட்டிற்கு புதுசு... அப்போ நீங்க வாங்குங்க

சுஸுகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125) ஸ்கூட்டர் புதிய ட்யூயல்-டோன் நிறத்தேர்வில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பெயிண்ட் நிறத்தில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் எவ்வாறு உள்ளது? புதிய பெயிண்ட்டில் இந்த ஸ்கூட்டரின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள் பலர் விரும்பி வாங்கக்கூடிய ஸ்கூட்டர்களுள் ஒன்றாக சுஸுகி ஆக்ஸஸ் 125 விளங்குகிறது. இருப்பினும், வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் புதிய அப்டேட்டை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் வேறொன்றும் இல்லை, ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் புதிய நிறத்தேர்வு ஆகும்.

suzuki access new dual-tone option

பேர்ல் ஷைனிங் பழுப்பு & பேர்ல் மிரேஜ் வெள்ளை என்பது அந்த புதிய பெயிண்ட் தேர்வாகும். அதாவது சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை இனி பேர்ல் ஷைனிங் பழுப்பு மற்றும் பேர்ல் மிரேஜ் வெள்ளை நிறங்கள் கலந்த பெயிண்ட் தேர்விலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த புதிய பெயிண்ட் தேர்வில், ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப் கௌல், டிஆர்எல் விளக்குகளுக்கு மத்தியில் மற்றும் முன்பக்க மட்கார்டில் ஷைனிங்கான பழுப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சைடு பேனல்களும் ஷைனிங் பழுப்பு நிறத்தில் உள்ளன. இருக்கை ஆனது அடர் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் மற்ற பாகங்கள் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ட்யூயல்-டோன் பெயிண்ட் தேர்வில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.85,300 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுவே, ரைடு கனெக்ட் எடிசனில் ரூ.90,000 ஆகும்.

ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் புதிய பெயிண்ட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் & விற்பனை பிரிவின் நிர்வாக துணை தலைவர் தேவாஷிஷ் ஹண்டா கருத்து தெரிவிக்கையில், "50 இலட்ச சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் உற்பத்தியை கடந்திருப்பது எங்களுக்கு மிகவும் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வாகும். ஏனெனில், ஆக்ஸஸ் 125 இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் பிராண்ட்களில் ஒன்றாகும்.

suzuki access new dual-tone option

இந்த சந்தர்ப்பத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் முதன்மையான தயாரிப்பில் (ஆக்ஸஸ் 125) புதிய வண்ணங்களை கொண்டு வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். மேலும், எங்களது 'சாலிட் ஐஸ் க்ரீன்/ பேர்ல் மிரேஜ் ஒயிட்' நிற வேரியண்ட்டுக்கு நிறைய நேர்மறையான கருத்துக்களை பெற்ற பிறகே இந்த வண்ணம் அறிமுகப்படுத்தப்படுகிறது" என்றார்.

புதிய பழுப்பு - வெள்ளை நிற பெயிண்ட் தேர்வை தவிர்த்து சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் வேறெந்த அப்டேட்டும் இல்லை. இதனால், ஆக்ஸஸின் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்படும் அதே என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்கள் தான் ஆக்ஸஸின் இந்த புதிய பெயிண்ட் தேர்விலும் வழங்கப்படும். சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 8.58 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆக்ஸஸில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்படுகிறது. ஆக்ஸஸ் ரைடு கனெக்ட் எடிசனில் கூடுதலாக ப்ளூடூத் இணைப்பு வசதி, டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், போன் அலார்ட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சுஸுகி நிறுவனம் கூறுவதை போல், ஆக்ஸஸ் 125 ஏற்கனவே பலரது விரும்பத்திற்குரிய 125சிசி ஸ்கூட்டராக விளங்குகிறது. அப்படியிருக்கையில், புதிய ட்யூயல்-டோன் நிறத்தேர்வு வழங்கப்பட்டு இருப்பது இந்த ஸ்கூட்டரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும். வரவிருக்கும் பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து மட்டுமின்றி, ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் 50 இலட்ச உற்பத்தி மைல்கல்லை நினைவுக்கூறும் விதமாகவும் இந்த புதிய ட்யூயல்-டோன் பெயிண்ட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 4, 2023, 7:30 [IST]
English summary
Suzuki access 125 new dual tone colour option introduced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+