இத நேருல பாக்கணும்றது பல பேரோட கனவுங்க.. சீக்கிரமே நிறை வேற போகுது! பொதுவெளியில காட்சிப்படுத்த சுஸுகி திட்டம்!

இருசக்கர வாகன பிரியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Suzuki Burgman Electric) இருக்கின்றது. இதை இதுவரை ஒருவர் கூட நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஏக்கத்தைத் தீர்த்து வைக்கும் முயற்சியிலேயே தற்போது சுஸுகி களமிறங்கி இருக்கின்றது.

அதாவது, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிப்படுத்த அது திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனம் எங்கு? எப்போது காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது? என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் எல்லாம் அதில் எதிர்பார்க்கப்படுகின்றன? இதுபோன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Suzuki burgman electric scooter

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 இன் தோற்றம் எப்படி இருக்கும்? வழக்கமான பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 எப்படி இருக்குமோ அதை ஒத்த தோற்றத்திலேயே மின்சார அவதாரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125-ம் இருக்கின்றது. அதேவேளையில் கணிசமான அளவு மாற்றங்களை இந்த மாடலில் நம்மால் காண முடிகின்றது. பர்க்மேன் எலெக்ட்ரிக் எனும் பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் மிக முக்கியமான மாற்றமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்சாஸ்ட் குழாய் இடம் பெறவில்லை. இது ஓர் மின்சார வாகனம் என்பதால் அதன் தேவையும் இங்கில்லை. அதேவேளையில், முன் பக்கத்தில் சிறிய விண்ட் ஷீல்டு, முன் பக்கத்தின் மையப் பகுதியில் ஹெட் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே இதனை வழக்கமான பர்க்மேனைப் போல தென்பட செய்கின்றது.

Suzuki burgman electric side design

எப்போது? எங்கு காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது? விரைவில் சுஸுகியின் தாயகமான ஜப்பானில், ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 நடைபெற இருக்கின்றது. 26 அக்டோபர் தொடங்கி 5 நவம்பர் மாதம் வரையில் அந்நாட்டின் தலைநகரான டோக்யோவில் நடைபெற இருக்கின்றது. இந்த மோட்டார் ஷோவில் வைத்தே பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. புரோட்டை டைப் (முன் மாதிரி) மாடலே காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது.

125 சிசி திறன்: இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான திறனை வெளியேற்றும் என தெரிவிக்கின்றது. ஆகையால், செயல்திறன் மற்றும் வேகத்தில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125க்கு இணையான திறனை இது வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4kW மோட்டாரே இதில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால் 18 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பேட்டரி பேக் விபரம்: இதுகுறித்த விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், ஸ்வாப்பபிள் பேட்டரி பேக்கே இதில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவாஸாகி, ஹோண்டா, யமஹா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்கள் இதற்காகவே அண்மையில் இணைந்தன. அதாவது, ஸ்வாப்பபிள் தொழில்நுட்பம் பேட்டரி பேக்கை உருவாக்க அவை இணைந்தன.

இந்தியாவில் இது எப்போது விற்பனைக்கு வரும்? இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சுஸுகி தன்னுடைய பர்க்மேன் மின்சார ஸ்கூட்டரை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேவேளையில், இந்த வாகனத்தை சோதனையோட்டம் செய்யும் பணிகளில் அது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், வரும் ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் ஆகியவையே இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி நிறுவனம் பர்க்மேன் ஸ்கூட்டரில் மின்சார வெர்ஷனை மட்டுமில்லைங்க, வெகு விரைவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் வெர்ஷனையும் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுஸுகி ஜப்பான் சமீபத்தில் அதன் படங்களை வெளியிட்டது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 5, 2023, 10:55 [IST]
English summary
Suzuki burgman electric will be showcased at this event
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+