எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆக்டிவா வந்தாகூட அத தூக்கி சாப்பிட்டு விடும்! வேற லெவலில் தயாரான சுஸுகி இ-பர்க்மேன்!

சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக பர்க்மேன் இருக்கின்றது. இதன் மின்சார வெர்ஷனே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. உலக புகழ் வாகன கண்காட்சியான ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 தற்போது அந்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Suzuki burgman electric front design

இந்த ஷோ வாயிலாகவே சுஸுகி (Suzuki) நிறுவனம் அதன் பர்க்மேன் மின்சார வெர்ஷனை வெளியீடு செய்திருக்கின்றது. இ-பர்க்மேன் (e-Burgman) எனும் பெயரிலேயே அது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பெயருடன் சேர்த்து கேசக்கோ எனும் பேட்ஜும் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றது.

கேச்சக்கோ பேட்டரி சிஸ்டத்தை நிறுவனம் பயன்படுத்தி இருப்பதனால் இந்த பேட்ஜ் அதில் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வாகனம் புரோட்டோடைப் (முன் மாதிரி) மாடல் மட்டுமே என கூறப்படுகின்றது. அதேவேளையில், வெகுவிரைவில் இதன் உற்பத்தியை நிறுவனம் தொடங்கும் என கூறப்படுகின்றது.

Suzuki burgman electric side design

இதை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு செயல்களை சுஸுகி நிறுவனம் மேற்கொண்டு இருக்கின்றது. தற்போது உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது தொடங்கி பல செயல்களை அது செய்திருக்கின்றது. சமீபத்தில்கூட நிறுவனம் பர்க்மேன் மின்சார வெர்ஷனை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆகையால், இந்த வாகனம் வெகு விரைவிலேயே உலக நாடுகளில் விற்பனைக்கு வந்திவிடும் மின்சார வாகன பிரியர்களால் மிக தீவிரமாக நம்பப்படுகின்றது. ஸ்டைலிங் விஷயத்தில் பெட்ரோல் ஸ்கூட்டருடன் பல நிலைகளில் மின்சார பர்க்மேன் ஒத்துப் போகின்றது. அதேவேளையில், நீல நிற அலங்காரம் மற்றும் பேட்ஜ் உள்ளிட்ட விஷயங்களில் இது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

இத்துடன் இன்னும் சில மாற்றங்களையும் மற்ற தயாரிப்புகளிடம் இருந்து அது மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஷார்ப்பான தோற்றம் கொண்ட ஏப்ரான், எல்இடி லைட்டுகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதுதவிர, பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேரத்தில் ஒளிரும் லைட், உயரமான விண்ட் ஸ்கிரீன், கால் வைக்கும் இடத்தில் சில்வர் நிற ஸ்லேட்டுகள், அழகிய கைப் பிடிகள், 5ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, இந்தியாவின் அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட ஷாக் அப்சார்பர்கள் மற்றும் டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் ஆகியவை எலெக்ட்ரிக் பர்க்மேனில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக சிங்க்ரோனைஸ் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரீபிளேஸ் செய்யக் கூடிய லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பேட்டரி பேக் 44 கிமீ ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், விற்பனைக்கு வரும்போது இதை விட அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இ பர்க்மேன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்று இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. நிறுவனம் இதன் மின்சார வெர்ஷனை இந்தியாவில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியதன் வாயிலாகவே, நிறுவனம் கட்டாயம் இந்தியாவில் மின்சார வெர்ஷன் பர்க்மேனை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுஸுகி நிறுவனம் பர்க்மேன் ஸ்கூட்டரை மின்சார வெர்ஷனில் மட்டுமின்றி ஹைட்ரோஜன் பவர்டு வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஹைட்ரஜன் பவர்டு பர்க்மேன் கான்செப்ட் மாடலை சமீபத்தில் வெளியீடு செய்தது. சுஸுகி பர்க்மேனிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பே அந்த வாகனத்தை நிறுவனம் இத்தனை வெர்ஷன்களில் தயாரிக்கக் காரணமாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களே பணியாற்றி வருகின்றன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் சுஸுகியும் இணைய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 5:20 [IST]
English summary
Suzuki e burgman scooter unveiled in japan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+