சுஸுகி பைக்குகளில் எங்கிருந்து இத்தனை பேர் வந்தாங்கனு தெரியல!! பைக்கை விட்டு கீழே இறங்க மனசே வரல!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் மட்சூரி (Matsuri) என்ற பெயரில் பைக் ரைடிங் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் பெங்களூரில் சுஸுகி மட்சூரி நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. நமது டிரைவ்ஸ்பார்க் குழு இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது. அப்போது எங்களை கவர்ந்த விஷயங்களை தொகுப்பாக வழங்கியுள்ளோம்.

பைக்குகளை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது என மட்டும் இருந்தால் வணிகத்தை பெருக்க முடியாது. இது ஆட்டோமொபைல் துறைக்கு மட்டுமல்ல, எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதையும் தாண்டி, வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவதில்தான் வணிகத்தின் வெற்றி அடங்கியுள்ளது. இதனை சுஸுகி மோட்டார்சைக்கிள் நன்றாக உணர்ந்து வைத்துள்ளது.

suzuki matsuri event in bangalore

அதன்படி, மக்களை கவரும் வகையில் மட்சூரி என்ற பெயரில் ரைடிங் & இசை நிகழ்ச்சியை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் நடத்தி வருகிறது. யமஹா நிறுவனத்தின் 'தி கால் ஆஃப் தி ப்ளூ'-இன் அதே ஃபார்முலா. ஆனால் சுஸுகி மட்சூரியில் பெரிய பெரிய ஸ்பீக்கர்கள் உடன் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால், பங்கேற்ற பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டன.

இணையம் வழியாக முன்பதிவுகள் ஏற்கப்பட்டு இருந்தன. கடந்த 2023 அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் சுஸுகி மட்சூரி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. பெங்களூரில் உள்ள ஜேகே கிராண்ட் அரேனாவில் இந்த நிகழ்ச்சிக்கு சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

suzuki matsuri event in bangalore

சுமார் 3,300க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சுஸுகி மோட்டார்சைக்கிளின் விற்பனை, சந்தைப்படுத்துதல் & விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்கான நிர்வாக துணை தலைவர் தேவஷிஷ் ஹண்டா அவர்களும் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுஸுகி பைக்குகள் நம்மை வரவேற்றன.

ஜிக்ஸெர், வி-ஸ்டோர்ம் என கவர்ச்சிக்கரமான சுஸுகி பைக்குகள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக, காட்டெருமை போல் முழுவதும் கருப்பு நிறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயபுஸா பைக் நிறைய பேரது வாயை பிளக்க வைத்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டே நடந்து சென்றால், பைக் சைலன்சர் உறுமும் சத்தம் நம்மை ஈர்க்க ஆரம்பித்தது.

suzuki matsuri event in bangalore

நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழையும் பார்வையாளர்கள் அனைவரும் கூடி நின்றவாறு எதோ ஒரு விஷயத்திற்காக கரகோஷமிட்டுக் கொண்டிருந்தனர். பைக் ஸ்டண்ட் ஆக தான் இருக்கும் என நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தால், பைக் ஸ்டண்டே தான். ரைடர்கள் இருவர் தங்களது பைக்குகளுடன் அட்டகாசம் செய்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக நடுவில் இரு பெண்கள்.

அந்த இரு பெண்களுள் ஒருவர் நமது தமிழகத்தை சேர்ந்த பைக் ரைடர் தமிழ் செல்வி. பின்னர், அவரை அழைத்து ஓர் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். அதனை நமது டிரைவ்ஸ்பார்க் யூடியூப் சேனலில் காணலாம். பாடகர்கள் ரஸ்டம் கே படேல், ரகு தீக்‌ஷிட் மற்றும் டிஜே விஜய் குமார் யு டி உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கட்டிப் போட்டது.

suzuki matsuri event in bangalore

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறும் மோட்டார்சைக்கிள் ஸ்டண்ட் நிகழ்ச்சி என கூறி இருந்தால் இத்தனை பார்வையாளர்கள் வந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. எந்தவொரு விஷயத்திற்கும் உடன் இசை இருக்கும்போது மக்களை கவர்ந்துவிடுகிறது. நிகழ்ச்சியில், ரைடர்கள் தங்களது ரைடிங் திறனை சோதித்துக் கொள்ள வளைத்து, வளைத்து வழங்கப்பட்டு இருந்த டிராக்குகள் எங்களை கவர்ந்தன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 15:28 [IST]
English summary
Suzuki matsuri event in bangalore festivity of motorcycle culture
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X