7 Million Unit டூ-வீலரை உற்பத்தி செய்த பிரபல நிறுவனம்.. இந்த நிறுவனமானு ஆச்சரியப்படும் வாகன உலகம்!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle India)-ம் ஒன்று. இந்த நிறுவனமே 7 மில்லியனாவது யூனிட் இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்து விற்பனைக்காக ஆலையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் (V-Strom SX)-ம் ஒன்று. இந்த மாடலையே நிறுவனம் 7 மில்லியனாவது யூனிட்டாக உற்பத்தி செய்து தயாரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. சேம்பியன் யெல்லோ நிற வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸே விற்பனைக்காக தற்போது சந்தைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

Suzuki rolls out 7 millionth unit motorcycle

சுஸுகி நிறுவனம் அதன் வர்த்தக பணிகளை இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முதல் முறையாக தொடங்கியது. கிட்டதட்ட அந்நிறுவனம் நாட்டில் கால் தடம் பதித்து 17 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இந்த நிலையிலேயே இத்தகைய மாபெரும் வரலாற்று சாதனையை இருசக்கர வாகன உற்பத்தியில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் படைத்திருக்கின்றது.

சுஸுகியின் குறிப்பிட்ட சில இருசக்கர வாகன மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே நிறுவனத்தால் இந்த பிரமாண்ட உற்பத்தி எண்ணிக்கையை எட்ட முடிந்திருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று விதமான பிரிவுகளில் தன்னுடைய டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மோட்டார்சைக்கிள்ஸ், பிக் பைக்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதில், முதலாவது பிரிவான மோட்டார்சைக்கிள்ஸ் பிரிவில் வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் (V-Strom SX), ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 (Gixxer SF 250) ஜிக்ஸெர் 250 (Gixxer 250), ஜிக்ஸெர் எஸ்எஃப் (Gixxer SF) மற்றும் ஜிக்ஸெர் (Gixxer) ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களை சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பிக் பைக்ஸ் பிரிவில் வி-ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி(V-Strom 650XT), கடானா (Katana) மற்றும் ஹயபுசா (Hayabusa) ஆகிய பைக்குகளை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்கூட்டர் பிரிவில் அவெனிஸ் (Avenis), அக்செஸ் 125 (Access 125), பர்க்மேன் ஸ்ட்ரீட் (Burgman Street) மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் (Burgman Street EX) ஆகிய மாடல்களை சுஸுகி இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றில், இந்திய சந்தையில் ஜிக்ஸெர் வரிசையில் உள்ள அனைத்து பைக் மாடல்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஸ்கூட்டரில் அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகிய மாடல்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்டும் மிக சூப்பரானதாக உள்ளது.

இவற்றிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பே சுஸுகி மோட்டார்சைக்கிளை 7 மில்லியனாவது யூனிட்டை தயாரிக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற நிதியாண்டில் மட்டும் 9.38 லட்சம் புதிய சுஸுகி டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இது 2021-22 ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 24.3 சதவீதம் அதிக விற்பனையாகும். இதுபோன்று தொடர்ச்சியாக விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வருவதனாலேயே நிறுவனத்தால் இந்தியாவில் சாதிக்க முடிந்திருக்கின்றது. வரும் காலங்களிலும் விற்பனையிலும், உற்பத்தியிலும் இந்த நிறுவனம் பல்வேறு சாதனைகளை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 7 மில்லியனாவது இருசக்கர வாகனத்தை உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றி இருப்பது ஒட்டுமொத்த இருசக்கர வாகன உலகிற்கும் மிக பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்போது சந்தையில் போட்டி பலமடங்கு அதிகரித்து காணப்படுவதானலேயே பலரும் சுஸுகியின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு நிற்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 17:39 [IST]
English summary
Suzuki motorcycle achieves new milestone producing 7 millionth two wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+