கூரையை பீய்த்து கொட்டுது!! சுஸுகி 2-வீலர்களை தான் எல்லாரும் தேடி போறாங்க - எல்லா பக்கத்திலும் இலாபம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 2 வீலர்கள் விற்பனையில் 13% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அப்படியென்றால், கடந்த செப்டம்பர் மாதத்தில் எத்தனை 2-வீலர்களை சுஸுகி விற்பனை செய்துள்ளது என்பதை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆகும். ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் தொழிற்சாலை கூட உள்ளது. இங்கு, ஆக்ஸஸ் 125 போன்ற விலை குறைவான ஸ்கூட்டர்களில் இருந்து விலைமிக்க பைக்குகள் வரையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

suzuki motorcycle two wheeler sales

இங்கு உற்பத்தி செய்யப்படுபவை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்தமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 97,936 இருசக்கர வாகனங்களை இந்தியாவிலும், மற்ற வெளிநாடுகளிலும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்டவை 83,798 ஆகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 16% குறைவான இருசக்கர வாகனங்களையே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், இவற்றை காட்டிலும் முக்கியமானதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக சுமார் 103,336 இருசக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து இருந்தது.

suzuki motorcycle two wheeler sales

இதில் உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்டவை 83,045 ஆகும். வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை 20,291. இருசக்கர வாகனங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புது, புது ஷோரூம்களை சுஸுகி திறந்துள்ளது. சமீபத்தில் கூட, ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் சோலன் பகுதியில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை சுஸுகி திறந்துள்ளது.

அதேபோல், சுஸுகி மிட்சுரி என்ற பெயரிலான ஓர் இசை நிகழ்ச்சியும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. இவ்வாறான முயற்சிகளின் மூலமாக 2-வீலர்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி தேவஷிஷ் ஹண்டா கூறுகையில், "எங்களது மனமார்ந்த நன்றியை எங்களது வாடிக்கையாளர்கள், பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் உன்னதமான எங்களது குழுவினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் எங்களது தயாரிப்புகளுக்கு மிகவும் தேவை இருப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது" என்றார். இந்தியாவில் சுஸுகியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக, ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் விளங்குகிறது. ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவில் இதுவரையில் சுமார் 50 இலட்ச யூனிட்கள் உற்பத்தி செய்துள்ளதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் தான் கொண்டாடியது.

suzuki motorcycle two wheeler sales

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்கு ஷைனிங் பழுப்பு/ பேர்ல் மிராஜ் வெள்ளை பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகஸஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசனிலும், ரைடு கனெக்ட் எடிசன் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.85,300இல் இருந்து ரூ.90,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விலை குறைவான வாகனங்களில் ஸ்பெஷல் எடிசன்களை மட்டுமே அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறது. மற்றப்படி, எல்லாரும் வாங்கக்கூடிய வகையிலான 2-வீலர்கள் பெரியதாக இந்த பிராண்டில் இருந்து சமீப காலங்களில் வெளிவரவில்லை. அப்படியிருந்தும், சுஸுகி 2-வீலர்களின் விற்பனை அதிகரிக்கிறது என்றால், பட்ஜெட் விலையிலான புது, புது 2-வீலர்களை களமிறக்க சுஸுகி யோசிக்க வேண்டும்...

More from DriveSpark

Article Published On: Wednesday, October 4, 2023, 11:21 [IST]
English summary
Suzuki motorcycle sales report 2023 september
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X