இதுதான் சரியான நேரம்!! தீபாவளிக்கு சுஸுகியில் ஒரு 2-வீலரை வாங்கி போடுங்க... இப்போ விட்டால் பின் முடியாது!

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் எவ்வளவு குறைந்த விலையில் சுஸுகி 2-வீலர்ஸை வாங்கலாம் என்பதை இனி பார்க்கலாம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருகின்றன. தீபாவளி என்றாலே புதியதாக ஒரு வாகனத்தை வாங்குவோம் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். இதனை டார்க்கெட் செய்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த நேரத்தில் புது புது வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இதனை எந்த நிறுவனமும் மறப்பதில்லை.

suzuki motorcycles festival offers

அத்துடன், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சலுகைகளும் தீபாவளி சமயத்தில் அறிவிக்கப்படுவது உண்டு. இந்த வரிசையில், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் வாகனங்களுக்கு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளின் படி, சுஸுகி 2-வீலர்ஸை ரூ.5,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் பெறலாம்.

அத்துடன், வாகனத்தின் மொத்த விலையிலும் 100% கடனுதவியை பெறலாம். இதற்கு எதையும் அடமானம் வைக்க வேண்டிய அவசியமில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ரூ.6,999 மதிப்புள்ள இலவச ரைடிங் ஜாக்கெட் மற்றும் ரூ.7,000 வரையிலான இன்ஸ்சூரன்ஸ் சலுகைகளை சுஸுகி மோட்டார்சைக்கிளில் பெறலாம். இந்த சலுகைகளை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற முடியும்.

suzuki motorcycles festival offers

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2023 அக்டோபர் 31ஆம் வரையில் இந்த சலுகைகள் அமலில் இருக்கும். சுஸுகி பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் தற்சமயம் அவெனிஸ், ஆக்ஸஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இ.எக்ஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்களும், வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ், ஜிக்ஸெர் எஸ்.எஃப்250, ஜிக்ஸெர் 250, ஜிக்ஸெர் எஸ்.எஃப் மற்றும் ஜிக்ஸெர் உள்ளிட்ட பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றுடன், வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, ஹயபுஸா, கதானா போன்ற சூப்பர் பைக்குகளும் சுஸுகி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுடன் விரைவில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 800டிஇ என்ற சூப்பர் பைக்கும் இணையவுள்ள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

suzuki motorcycles festival offers

சுஸுகி 800டிஇ பைக்கில் புத்தம் புதிய 776 சிசி லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அமைப்பில் சுஸுகியின் கிராஸ் பேலன்சர் மற்றும் 270-டிகிரி கிரான்க்‌ஷாஃப்ட் டிசைன் உள்ளன. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 83 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் டார்க் திறன் குறித்த விபரங்கள் இல்லை. இந்த சுஸுகி வி-ஸ்ட்ரோம் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கில் 22.7kmpl வரையிலான மைலேஜை பெறலாம் என சுஸுகி தெரிவித்துள்ளது. இந்த புதிய சுஸுகி பைக்கில் ரைடு-பை-வயர், ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன், பை-டைக்ரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

suzuki motorcycles festival offers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சூப்பர் பைக்குகளை வாங்க முடியாவிடினும், சுஸுகி அறிவித்துள்ள சலுகையின் மூலம் பட்ஜெட் விலையில் ஒரு 2-வீலரை ஆவது வாங்கலாம். இந்த சலுகைகள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதலால், முடிந்தவரையில் விரைவாக, இந்த சலுகையை பயன்படுத்தி, பிடித்த சுஸுகி 2-வீலரை வாங்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 20:16 [IST]
English summary
Suzuki motorcycles festival offers here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X