Tata Street Fire 21-speed சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... இவ்ளோ கம்மி விலைக்கு இவ்ளோ அழகான சைக்கிளா!..

டாடா என்டர்பிரைஸ் (Tata Enterprise)-க்கு சொந்தமான இ-காமர்ஸ் (e-commerce) தளங்களில் ஸ்ட்ரைடர் (Stryder)-ம் ஒன்று. இந்த தளத்தின் வாயிலாக பிரத்யேகமாக சைக்கிள்கள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இதில் விற்பனைக்குக் கிடைக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கையையே புதிய சைக்கிள்களின் வாயிலாக டாடா என்டர்பிரைசஸ் அதிகரிக்கச் செய்திருக்கின்றது.

இதன் மிக சிறப்பாக விற்பனையாகும் மிதிவண்டி மாடலாக ஸ்ட்ரீட் ஃபையர் இருக்கின்றது. இதிலேயே இரு புதிய தேர்வுகளையே நிறுவனம் விற்பனைக்குக் அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்ட்ரீட் ஃபையர் 21 ஸ்பீடு (Street Fire 21 Speed) மற்றும் ஸ்ட்ரீட் ஃபையர் டெசர்ட் ஸ்டார்ம் (Street Fire Desert Storm) என்கிற புதிய வேரியண்டுகளையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Tata enterprise stryder street fire

ஸ்ட்ரீட் ஃபையர் 21 ஸ்பீடு, இந்த தேர்வு பன்முக ஸ்பீடு வசதி மற்றும் டபுள்-வால் அலாய் ரிம் வசதி ஆகியவற்றைத் தாங்கியதாக இருக்கின்றது. ஸ்ட்ரீட் ஃபையர் டெசர்ட் ஸ்டார்ம், சூப்பரான நிற தேர்வைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இவை இரண்டும் நகர பயன்பாட்டிற்கு உகந்த மிதிவண்டிகள் ஆகும்.

மேலும், ட்ரெண்டி லுக் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை, சுலபமான பயன்பாட்டு ஆகிய அனைத்தையும் தாங்கிய சைக்கிள்களாகவும் இவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டிற்கும் தற்போது அறிமுக விலையாக சிறப்பு சலுகை விலை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஸ்ட்ரீட் ஃபையர் 21 ஸ்பீடு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டது என்பதாலும், பன்முக ஸ்பீடு வசதிகளைத் தாங்கிய சைக்கிள் என்பதாலும் அதற்கு சற்று அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Tata enterprise stryder street fire entire range

ரூ. 9,599 நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. சிங்கிள் ஸ்பீடு வசதிக் கொண்ட தேர்வாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்ட்ரீட் ஃபையர் டெசர்ட் ஸ்டார்முக்கு ரூ. 6,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்ட்ரீட் ஃபையர் 21 ஸ்பீடு தேர்வின் அழகிய தோற்றத்திற்காக மெல்லிய மற்றும் ஸ்டைலான ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நகர பயன்பாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு இதனை வடிவமைத்திருப்பதால் இத்தகைய தோற்றத்தை அது வழங்கி இருக்கின்றது. இலகு ரக எடைக் கொண்ட கார்பன் ஸ்டீல் ஃப்ரேமே சைக்கிளின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, குயிக் ரிலீஸ் ஹைப் மற்றும் சுலபமான அட்ஜஸ்ட்மென்டிற்கான சேடில்கள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், மிகவும் உறுதியான தன்மைக் கொண்ட இரட்டை சுவர் அலாய் ரிம் (double wall alloy rim) சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டது. அதேவேளையில், இந்தியாவின் எந்த மாதிரியான சாலையையும் அது அசால்ட் செய்துவிடும். குறிப்பாக கரடு-முரடான சாலையிலும் அதை பயன்படுத்த முடியும்.

இதுபோதாதென்று இந்த ஸ்ட்ரீட் ஃபையர் 21 ஸ்பீடு வேரியண்டில் ஷிமனோ 21 ஸ்பீடு கியர், மென்மையான மற்றும் திறமையான சவாரிக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைபோலவே கணிசமான சூப்பரான வசதிகளைத் தாங்கிய வேரியண்டாக ஸ்ட்ரீட் ஃபையர் டெசர்ட் ஸ்டார்ம் இருக்கின்றது. டிஐஜி வெல்டட் ஸ்டீல் ஃப்ரேம் இதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தை தவிர்க்கும் கிராஃபிக்குகள், பிளாக்-பவுடர் பூசப்பட்ட ஸ்டீல்-வீல், நைலான் டயர்கள் என எக்கச்சக்க பிரீமியம் அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் சைக்கிளை பயன்படுத்துபவர்கள் அதிகளவில் தென்படுகின்றனர். இடம்பெயர்வதற்காக பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் இப்போது உடல் நலனுக்காக பயன்படுத்தக் கூடிய வாகனமாக மாறி இருக்கின்றன. பல ஐடி ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களின் வார இறுதிகளை சைக்கிள் பயணங்களுடன் கழிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாகவே இந்தியாவில் அதிக விலைக் கொண்ட சைக்கிள்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதிய ஸ்ட்ரைடர்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 22, 2023, 8:47 [IST]
English summary
Tata enterprise launches new additions in street fire range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+