ஆக்டிவா மார்கெட்டையே காலி செய்யப்போகும் ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்! எப்ப லாஞ்ச் தெரியுமா?

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் அந்நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டருக்கான டீசராக இருக்கிறது. இதை பார்க்கும்போது ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டருக்கானன டீசர் என பேசப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டூவீலர் விற்பனையை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது பிராண்டில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

honda dio 125

அதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது அந்த டீசரில் ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லைட் டூம் பகுதி மட்டும் இருப்பது போல காட்சியளிக்கிறது. இதில் இது குறித்து அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்ற வாசகமும் இருக்கிறது. இந்த ஹெட்லைட் டுமை பார்க்கும்போது இது ஹோண்டா டியோ ஸ்கூட்டருக்கான டீசர் என்பது போல தெரிகிறது.

ஹோண்டா நிறுவனம் டியோ 125 ஸ்கூட்டரை வெளியிடும் முடிவில் இருந்து வருவதாக இதற்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை அறிமுகத்தை தான் ஹோண்டா செய்யப் போவதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து ஹோண்டா நிறுவனம் எந்த வித தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்த டீசர் வீடியோவில் இந்த ஸ்கூட்டரின் எக்ஸாஸ்ட் சவுண்ட் இடம் பெற்றுள்ளது. இதை பார்க்கும்போது இது சற்று ஸ்போட்டியான ஸ்கூட்டராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அப்பொழுது தான் இந்த ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்படும்.

ஏற்கனவே டியோ 110 ஸ்கூட்டர் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது டியோ 125 ஸ்கூட்டரில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. முக்கியமாக இந்த இரு ஸ்கூட்டர்களையும் பிரித்து பார்க்கும் வகையில் கலர் ஸ்கீம்கள் மாற்றப்படும் மேலும் 125 சிசிக்கான பேட்ஜிங்கும் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதன் இஞ்ஜினை பொருத்தவரை ஆக்டிவா 125 மற்றும் கிரேசியா 125 ஆகிய ஸ்கூட்டர்களில் உள்ள அதே 123.9 சிசி ஏர்கூல்டு இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இது 8.18பிஎச்பி பவரையும் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் பங்க்ஷனை கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஹோண்டாவின் ஹச் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் படி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி லைட்டிங், ஸ்டாண்ட் கட் ஆப், பாஸ் ஸ்விட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். ஆக மொத்தத்தில் ஆக்டிவாவின் மார்க்கெட்டை இந்த டியோ 125 காலி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது ஹோண்டா நிறுவனம் புதிய 350 சிசி பைக்கை தயார் செய்து வருகிறது. இது ஹோண்டா ஹெனஸ், சிபி 350 மற்றும் சிபி 350 ஆர்எஸ் ஆகிய பைக்கில் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்படுகிறது. இது இதுவரை எந்த வகையான 350 பைக் என்ற தகவல் வெளியாகவில்லை. ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மற்றும் யெஸ்டி ரோடுஸ்டர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கில் ஹைனஸ் மற்றும் சிபி 350 ஆர்எஸ் ஆகிய பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்பதால் இந்த பைக் இஞ்சின் 350 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாகத்தான் இருக்கும். இது 21 பிஹெச்பி பவரையும் 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஹோண்டா இந்த இன்ஜினை புதிய பைக் இதுக்காக டிவீக் செய்தாலும் செய்யலாம்.

டிரைஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த புதிய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட இந்த டியோ 125 ஸ்கூட்டரின் விற்பனை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இளைஞர்கள் பலர் இந்த ஸ்கூட்டருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஸ்கூட்டரின் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 15:00 [IST]
English summary
Teaser hints at upcoming honda scooter possibly dio 125
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+