போலீஸ்காரரோட வேலை பறிபோனதுக்கு இந்த வீடியோதான் காரணம்... என்ன செய்தார் அவர்? வைரலாகும் வீடியோ!
போலீஸ்காரர் ஒருவரின் வேலை தற்போது பறி போயிருக்கின்றது. அதற்கு ஓர் வைரல் வீடியோவே காரணம் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்ன வீடியோ?, வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படும் அளவிற்கு அவர் அப்படி என்ன செய்தார்? என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது மிகப் பெரிய போக்குவரத்து விதி மீறலாகப் பார்க்கப்படுகின்றது. இருப்பினும், பலர் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இணையத்தில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காகவும், பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் வாகன சாகச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கிடைக்க இருப்பது சில நிமிட த்ரில்லான பயண அனுபவம் மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்த நேரத்தில் நம்முடைய கவனம் சிறிதளவு சிதறினாலும் கை, கால்களை இழக்க நேரிடும். பல லட்சம் பேர் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டு கை, கால்களை இழந்து இருக்கின்றனர். ஏன் உயிரை இழந்தவர்களும் அதிகளவில் இருக்கின்றனர்.
இதுபோன்று அதிக ஆபத்து இருக்கின்ற காரணத்தினாலேயே பொதுவெளியில் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பேராபத்தை வாகன ஸ்டண்ட் ஏற்படுத்தும். இதனால்தான் ஸ்டண்ட் கூடவே கூடாது எனது காவல்துறை எச்சரிக்கை விடுக்கின்றது.
இதை மீறியும் வாகன ஸ்டண்டில் ஈடுபடும் நபர்கள் இந்தியாவில் இருக்கதான் செய்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் காவல்துறை தயங்கியதே இல்லை. இணையத்தில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டும் காவல்துறையினர் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இளம் போலீஸ்காரர் ஒருவர், பைக் ஸ்டண்டில் ஈடுபட்டிருக்கின்றார். அத்துடன், அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ வைரலாகிய நிலையிலேயே தற்போது அந்த போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பைக் ஸ்டண்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் வேலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார். இந்த சம்பம் உத்தரப் பிரதேசம் மாநிலத்திலேயே அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விதிமீறலில் ஈடுபட்டது கான்ஸ்டபிள் சந்தீப் குமார் சவுபி என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இவரையே உபி காவல்துறை தற்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கின்றது.
சந்தீப் குமார் சவுபி இருசக்கர வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது தெரிகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய யமஹா எம்டி 15 பைக்கில் அவர் ஸ்டண்ட் செய்திருக்கின்றார். அதிக வேகத்தில் பயணித்தும் அவர் ஸ்டண்டில் ஈடுபட்டு இருக்கின்றார். பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவலரே இதுபோன்று விதிமீறல் செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மேலும், இதுபோன்று ஓர் போலீஸ்காரர் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டதற்காக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், போலீஸ்காரர் ஒருவரின் ரிட்டையர்மென்டை கொண்டாடுவதற்காக ஓர் காவல்நிலைய பேரணியில் ஈடுபட்டது. இதுகுறித்த வீடியோ வைரலானதுபோதும் இதேபோல் அனைத்து காவலர்கள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஸ்டண்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காவல்துறையைச் சேர்ந்த ஓர் நபர் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டு பலரை தூண்டும் வகையில் அதை வீடியோவாகவும் பதிவிட்டு இருக்கின்றார். காவலரின் இந்த முரண்பாடான செயலுக்கே போலீஸ் தற்போது அவர்மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








