நம்ம அரசாங்கமே நம்பி எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கி இருக்கு.. எந்த பிராண்டு? எவ்ளோ யூனிட் வாங்கி இருக்காங்க?
நம் தமிழ்நாடு அரசு சார்பில் மிக அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் பைக்குகள் வாங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த பிராண்டின் இ-பைக் வாங்கப்பட்டுள்ளது?, எத்தனை யூனிட்டுகள் வாங்கப்பட்டு உள்ளன?, எதற்காக-யாருக்காக வாங்கப்பட்டன என்பது பற்றிய அனைத்து விபரங்களையும் பார்க்கலாம், வாங்க.
சமீபத்தில் தலைமை செயலகத்தில் வைத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்., பல்வேறு துறைகளில் பணியாற்றும் 200 அரசு ஊழியர்களுக்கு இ-பைக்குகளை வழங்கி அவற்றை பச்சை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அந்த 200 யூனிட்டுகளும் ப்யூர் இவி (PURE EV) நிறுவனத்தின், ஈகோட்ரிஃப்ட் (ecoDryft) இ-பைக் மாடல்களாகும்.

மாசில்லா தமிழகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக இத்தகைய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் மின்சார வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. தற்போது முதல் கட்டமாகவே 200 யூனிட்டுகளை ப்யூர் இவி நிறுவனம் தமிழக அரசுக்கு டெலிவரி கொடுத்திருக்கின்றது.
இதையே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். நம்முடைய தமிழக அரசாங்கம் நம்பி வாங்கி இருக்கும் இந்த (ப்யூர் இவி ஈகோட்ரிஃப்ட்) எலெக்ட்ரிக் பைக்கானது பஜாஜ் பிளாட்டினாவைபோல தினசரி பயன்பாட்டிற்கு மிக உகந்த எலெக்ட்ரிக் பைக்காகும். இத்தகைய எலெக்ட்ரிக் டூ-வீலரையே நம்முடைய மாநில அரசு, அரசு பணியாளர்களின் களப்பணி பயன்பாட்டிற்காக வாங்கி இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலேயே வைத்து டிசைன் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இந்த டூ-வீலரின் அதிகபட்ச வேகமே மணிக்கு 75 கிமீ மட்டுமே ஆகும். இதில் 3 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ முதல் 130 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.
வெவ்வேறு விதமான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் ஈகோட்ரிஃப்ட் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஸ்மார்ட் ஃபோன் செயலி வசதி உள்ளிட்டவையும் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர ஓர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த இ-பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கிலேயே அரசு அதிகாரிகள் களப்பணியாற்ற இருக்கின்றனர். வழக்கமான பெட்ரோல் கம்யூட்டர் பைக்குகளான ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளிட்டவற்றிற்கு போட்டியளிக்கும் விதமாக ப்யூர் இவி தனது ஈகோட்ரிஃப்ட் பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சில மாநில அரசுகள் மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களை கொண்டு செல்லும் விதமாக, அதாவது அவற்றின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு மின்சார வாகனங்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஓர் செயலாகவும் தமிழக அரசின் இந்த லேட்டஸ்ட் செயல் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








