1 லட்ச ரூபாய் இருந்தா போதும் இந்த ஸ்கூட்டர்ல ஒன்ன உங்க வீட்டுக்கு ஓட்டிட்டு போகலாம்! எல்லாமே செம ஒர்த்!
இந்தியாவில் தற்போது வாகன விலைகள் எல்லாம் அதிகரித்துள்ள நிலையில் பலர் ரூ1 லட்சத்திற்குக் குறைவான விலையிலான வாகனங்களைத் தேதி வருகின்றனர். அவர்களுக்கென மார்கெட்டில் உள்ள குறைந்த விலை ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
டிவிஎஸ் ஜூபிட்டர்: இந்த ஸ்கூட்டரின் விலை மார்கெட்டில் ரூ83,605 முதல் ரூ90,405 என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகிறது. இந்த ஸ்கூட்டரில் வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் கூடிய ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், நேவிகேஷன் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட், பார்க்கிங் பிரேக், எஸ்பிடியுடன் கூடிய டிஸ்க் பிரேக் ஆகியன உள்ளது.

சுஸூகி ஆக்ஸஸ் 125: இந்த ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் டிஜிட்டல் கன்சோல், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அதிக ஸ்பீடு அலர்ட், இடிஏ அப்டேட் உள்ளிட்ட தொழிற்நட்ப வசதிகளும், சைடு ஸ்டாண்ட் இன்டர்லாக், யூஎஸ்டி சக்கெட் இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச் ஆகிய வசதிகள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ரூ79,400 முதல் ரூ85,500 வரையிலான விலையில் விற்பனையாகிறது.
என்-டார்க் 125: இந்த ஸ்கூட்டரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. ஜூபிட்டர் ஸ்கூட்டரை போல இதில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் போனை கனெக்ட் செய்யும் அம்சம், நேவிகேஷன், ரைடு குறித்த தகவல்கள், மல்டி மோடு டிஸ்பிளே, இன்ஜின் கில் ஸ்விட்ச், யூஎஸ்பி சார்ஜர், வெளிப்புற ஃப்யூயல் பில்டர் கேப், இந்த ஸ்கூட்டர் ரூ84,386 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.

ஹீரோ டெஸ்டினி 125: இந்த ஸ்கூட்டரில் முக்கியமான அனைத்து தொழிற்நுட்ப அம்சங்களும் இருக்கிறது. இதன் போட்டி ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் டிஜி-அனலாக் அம்சம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மொபைல் சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளும், இன்ஜினில் ஐ3எஸ் தொழிற்நுட்பம் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹீரோ மீஸ்ட்ரோ எட்ஜ் 125: ஹீரோ நிறுவனத்தின் ஸ்டைலிஷான ஸ்கூட்டர் இது. இதில் அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி லைட்டிங் செட்டப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியன உள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ79,356 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது.

யமஹா ரே ஸிஆர் 125 ஹைபிரிட்: ஸ்கூட்டரில் ஹைபிரிட் ஆப்ஷன் கொண்ட சில ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று, இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒய் கனெக்ட் ஆப்ஷன் உடன் வருகிறது. இதில் தனித்துவமான பாஸ் மற்றும் மல்டி ஃபங்சன் ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட்: ஆக்டிவா வண்டியிலேயே டாப் ஸ்பெக் ஸ்கூட்டர் இது தான். இதில் ஸ்மார்ட் சேஃப், ஸ்மார்ட் ஃபைண்ட், ஸ்மார்ட் அன்லாக், ஸ்மார்ட் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதில் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் ஸ்விட்ச் டிரங்க், ஃப்யூயல் லிட் ஓப்பனர், ஏசிஜி உடன் கூடிய சைலெண்ட் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஒலா எஸ்1 ஏர்: ஓலாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது தான். இது ரூ84,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் டச் ஸ்கிரீன் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் செட்டப், ரிமோட் அன்லாக், நேவிகேஷன் மற்றும் பில்டு இன் ஸ்பீக்கர் உடன் கூடிய மியூசிக் பிளே பேக் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
யமஹா ஃபேஸினோ 125: இதுவும் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் ஸ்கூட்டர் தான். ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டரில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள், ஹைபிரிட் சிஸ்டம்ஸ் உள்ளது. இது ரூ78,600 முதல் ரூ91,230 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட்: இந்த லிஸ்டிலேயே சற்று விலை அதிகமான ஸ்கூட்டர் இது தான் இருந்தாலும் இதன் விலை ரூ1 லட்சத்திற்குள் தான் இருக்கிறது. இது மேக்ஸி ரக ஸ்கூட்டர், இதில் சுஸூகி ரைடு கனெக்ட், யூஸ்பி சாக்கெட், முன்பக்க டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள், லக்ஸி ஹைட்லைட், பின்பக்க எல்இடி லைட் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது. இதன் விலை ரூ93,000 முதல் ரூ97,000 வரை விற்பனையாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை அதிகரித்தபின்பு மக்கள் ஸ்கூட்டர்களில் அதிக தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதனால் தற்போது மார்கெட்டில் ஏகப்பட்ட தொழிற்நட்ப அம்சங்கள் பொருந்திய ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகிறது. இதில் இது எல்லாமே பெஸ்ட் தான்.


Click it and Unblock the Notifications









