ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை வாங்குறதுக்கு எங்கிருந்து இவ்ளோ கூட்டம் வருது? விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் வெளியாகியுள்ள கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இருசக்கர வாகனங்களை இனி பார்க்கலாம்.

வழக்கம்போல் கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த பிப்ரவரியில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 1 லட்ச யூனிட்கள் வரையில் அதிகரித்துள்ளது. 2022 பிப்ரவரியில் 1,93,731 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 2,88,605 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!!

அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் சந்தை பங்கு 34.78% ஆகும். அதாவது நம் நாட்டில் கடந்த மாதத்தில் 3இல் ஒருவர் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கையே தேர்வு செய்துள்ளனர். இதேபோல் 2வது இடத்தில் உள்ள, இந்தியாவின் நம்பர்.01 ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனையும் 2022 பிப்ரவரியை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 1,45,317 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 பிப்ரவரியில் 1,74,503 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. வருடம்-வருடம் ஒப்பிடுகையில், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 20.08% உயர்ந்துள்ளது. 3வது இடத்தில், பஜாஜ் பல்சர் பைக்குகள் புதிய உச்சமாக கடந்த பிப்ரவரியில் 80,106 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!!
Rank Model Feb-23 Feb-22 Growth (%) YoY
1 Hero Splendor 2,88,605 1,93,731 48.97
2 Honda Activa 1,74,503 1,45,317 20.08
3 Bajaj Pulsar 80,106 54,951 45.78
4 Hero HF Deluxe 56,290 75,927 -25.86
5 TVS Jupiter 53,891 47,092 14.44
6 Suzuki Access 40,194 37,512 7.15
7 Honda CB Shine 35,594 81,700 -56.43
8 TVS XL 100 35,346 35,848 -1.40
9 TVS Apache 34,935 16,406 112.94
10 TVS Raider 30,346 14,744 105.82

ஆனால் 2022 பிப்ரவரியில் வெறும் 54,951 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், பல்சர் பைக்குகளின் விற்பனை ஆனது 45.78% அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் டாப்-3 2-வீலர்களின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை அதிகரித்த போதிலும், இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை ஆனது 25.86% கடந்த ஆண்டு பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

2022 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் எண்ணிக்கை 75,927 ஆகும். அதுவே, கடந்த மாதத்தில் 56,290 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இவை இரண்டும் முறையே 53,891 மற்றும் 40,194 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை டபுள் மடங்கு அதிகரிப்பு!!

ஆனால் கடந்த 2022 பிப்ரவரியில் இவை இரண்டும் முறையே 47,092 மற்றும் 37,512 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் குறிப்பாக, ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் 2022 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரியில் 6,800 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவை இரண்டிற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள ஹோண்டா சிபி ஷைன் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்.எல்100 பைக்குகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இவை இரண்டும் கடந்த பிப்ரவரியில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக 35,594 மற்றும் 35,346 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் சிபி ஷைன் பைக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 81,700 விற்பனை உடன் ஆக்டிவாவிற்கு அடுத்து 3வது இடத்தில் இருந்தது. இந்த டாப்-10 வரிசையில் கடைசி இரு இடங்களில் டிவிஎஸ் மோட்டாரின் தயாரிப்புகளான அப்பாச்சி மற்றும் ரைடர் பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 34,935 மற்றும் 30,346 ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 10:49 [IST]
English summary
Top 10 two wheelers sales 2023 february
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+