ஒரு முறை ஃபுல்லா சார்ஜ் பண்ணா போதும் 125கிமீ பயமே இல்லாம போகலாம்.. டாப் 5 பெஸ்ட் ரேஞ்ஜ் தரும் இ-ஸ்கூட்டர்கள்!

இந்தியர்கள் மத்தியில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு வரவேற்பு அதிகரித்திருக்கின்றது என்றே கூறலாம். சந்தையில் மிக தாராளமாக மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும், குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக விற்பனைக்குக் கிடைப்பதுமே அவற்றிற்கு வரவேற்பு இரட்டிப்பாகிக் கொண்டிருக்க காரணமாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் முன்னணி நிறுவனங்களான ஓலா, ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனையில் இருக்கின்றன.

Electric scooters with 125km range

இந்த பதிவில் அவை பற்றிய தகவலையேக் காண இருக்கின்றோம். குறிப்பாக, ஓர் முழு சார்ஜில் 125 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், அவற்றின் சிறப்புகள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஒகினவா ஐ-பிரைஸ் பிளஸ் (Okinawa iPraise+): நம்முடைய இந்த பட்டியலின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும், ஓர் முழு சார்ஜில் 125 கிமீட்டருக்கும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும் இந்த வாகனமே இருக்கின்றது. ஒகினவா நிறுவனம் இந்தியாவில் பன்முக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வங்கிக் கொண்டிருக்கின்றது.

Okinawa ipraise plus

அதில் மிக சிறந்த ஒன்றாக ஐ-பிரைஸ் பிளஸ் இருக்கின்றது. இந்த வாகனத்தில் நிறுவனம் 3.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 137 கிமீ துரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், 2.5 kW திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 56 கிமீ வேகத்தில் பயணிக்க உதவும். இத்தனைச் சிறப்புகள் கொண்ட இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 1.46 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ather 450x

ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 (Ather 450X Gen 3): இந்தியாவில் பட்ஜெட் விலையில் அதிக ரேஞ்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 3.7 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 146 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வேகம் ஆகும். இதுமட்டுமில்லைங்க இந்த வாகனத்தால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதுமட்டுமின்றி பலதரப்பட்ட சிறப்பு வசதிகள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் விலை ரூ. 1.46 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ola s1 pro

ஹீரோ விடா வி1: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்வாகன பிராண்டே விடா ஆகும். இந்த பிராண்டின் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஓர் முழு சார்ஜில் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 142கிமீ துரம் வரை பயணிக்க முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.1.45 லட்சம் ஆகும். இதன் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 3.44kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஓலா எஸ்1 ப்ரோ: இந்தியாவின் டாப் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவே ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 181 கிமீ துரம் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ. 1.40 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில் அதிக ரேஞ்ஜை வழங்க வேண்டும் என்பதற்காக ஓலா 4 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது.

Simple one

சிம்பிள் ஒன்: ஏத்தர் எனெர்ஜியைப் போலவே இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த நிறுவனத்தின் மிக சூப்பரான தயாரிப்பாக சிம்பிள் ஒன் இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 212கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் விலை ரூ.1.45 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதன் அதிக ரேஞ்ஜ்க்காக 5kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு அதிகம் ரேஞ்ஜ் தரும் வாகனங்கள் அதிகளவில் விற்பனைக்குக் கிடைப்பதே மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த வரவேற்பு அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 18:10 [IST]
English summary
Top 5 electric scooters with a range of 125 km
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X