கேடிஎம் இப்படிஒரு லோகோவ பயன்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? லோகோவை அதிரடியாக மாற்றிய பிராண்டுகள்

காலத்திற்கு ஏற்றவாறு சின்னத்தை (லோகோவை) அவ்வப்போது மாற்றிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 8 முதல் 10 முறை வரை தங்களின் சின்னங்களை மாற்றி இருக்கின்றன. இதுகுறித்த மேலும் விபரத்தைப் பார்க்கலாம், வாங்க.

வாடிக்கையாளர்கள் மத்தியில் தங்களது முத்திரையை பதியச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் ஒரு முறை மக்கள் மனதில் நம்முடைய சின்னத்தை பதிய செய்துவிட்டால் அதனை அழிப்பது என்பது இயலாத ஒன்று. இதனால்தான் அரசியல் தலைவர்கள் சின்னத்திற்காக போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சின்னம்

சமீபத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையில் சின்னத்திற்காக மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தகுந்தது. சின்னங்களுக்கு அந்த அளவு முக்கியத்துவம் உள்ளது. இந்த அளவு மிக முக்கியமான முத்திரையை வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தொடர்ச்சியாக மாற்றிய சம்பவம் இந்த உலகில் அரங்கேறி இருக்கின்றது.

என்னது சின்னத்தை தொடர்ச்சியாக மாத்தி இருக்காங்களா?, ஆமாங்க, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தங்களின் சின்னங்களை மாடர்ன் உலகிற்கு ஏற்ப அப்கிரேட் செய்திருக்கின்றனர். அந்தவகையில், கடந்த காலங்களில் லோகோக்களை மாற்றிய சில முன்னணி நிறுவனங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்திய நிறுவனங்கள் தொடங்கி வெளிநாட்டு நிறுவனங்கள் வரை பலர் தங்களின் லோகோக்களை மாற்றி இருக்கின்றனர். இதுபற்றிய சுவாரஷ்ய தகவலைக் காணலாம், வாங்க.

சின்னம்

பஜாஜ் (Bajaj)

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ்-ம் ஒன்று. இந்தியாவின் இரண்டாவதும், உலகின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இது ஆகும். இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வாகன உற்பத்தியில் களமிறங்கியதில் இருந்து இதுவரை இரண்டுமுறை சின்னத்தை மாற்றி இருக்கின்றது.

முதல் சின்னம் நிறுவனத்தின் அறிமுகமான 1945இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பழைய லோகோவை இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் சேத்தக் ஸ்கூட்டரில் பார்க்க முடியும். மேலும், சில பல்சர் பைக்குகளிலும் அதைக் காண முடியும். புதிய லோகோவிற்கு 2004 ஆண்டிலேயே பஜாஜ் மாறியது. இப்போது வரை அந்த லோகோவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சின்னம்

கேடிஎம் (KTM)

அடிக்கடி லோகோவை மாற்றும் நிறுவனமாக கேடிஎம் காட்சியளிக்கின்றது. இந்த நிறுவனம் இதுவரை குறைந்தது பத்து முறையாவது லோகோவை மாற்றி இருக்கும். அதன் முதல் லோகோ 1953 லேயே அறிமுகம் செய்யப்பட்டது. புலி ஒன்று வட்டத்திற்குள் நுழைந்து வெளியே வருவதைப் போன்றும், அந்த வட்டத்திற்கு மேல் கேடிஎம் எனும் எழுத்துக்கள் அடங்கியது போன்றும் அந்த லோகோ இருக்கும். இத்தகைய லோகோவை அடுத்தடுத்த ஆண்டுகளில் மாற்றி, தற்போது, கேடிஎம் என்கிற வார்த்தைகள் மட்டும் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த புலி லோகோவானது அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த ஆண்டே மாற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, 1954லேயே மாற்றப்பட்டுவிட்டது. கேடிஎம் எழுத்தக்கள் முட்டை வடிவ வளையத்திற்குள் இருப்பதைப் போன்ற லோகோவே பயன்படுத்தப்பட்டது. இதிலேயே மாற்றம் செய்யப்பட்டு தற்போது கேடிஎம் எனும் எழுத்துக்கள் மட்டும் லோகோவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2003-லேயே லோகோ மாற்றப்பட்டது.

சின்னம்

ஹோண்டா (Honda)

கேடிஎம்-ஐ போல் அதிகளவு லோகோவை மாற்றிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹோண்டா இருக்கின்றது. இந்த நிறுவனம் இதுவரை 9 முறை லோகோவை மாற்றி இருக்கின்றது. முதன் முதலில் 1968-லேயே இதன் முதல் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, எச்எம் எனும் எழுத்து ஓர் முட்டை வடிவத்திற்குள் இருப்பதுபோன்றும்,

அதற்கு மேல் ஓர் ஒற்றை ரெக்கையும், அதற்கு கீழே ஹோண்டா எனும் வார்த்தையும் இடம் பெற்றிருக்கும். இந்த சின்னமே தற்போது முற்றிலுமாக மாற்றப்பட்டு உள்ளது. ஹோண்டா எனும் எழுத்தும் அதற்கு மேல் ஓர் ஒற்றை ரெக்கை இருக்கும் சின்னமே இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக இந்த சின்னம் மாற்றப்பட்டது 1988 இல் ஆகும்.

சின்னம்

ஹீரோ (Hero)

ஹீரோ நிறுவனம் ஆரம்பத்தில் ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவுடன் இணைந்தே அதன் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டது. இதன் பிரிவிற்கு பின்னரே நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. அதற்கு முன்னதாக ஹீரோ ஹோண்டா எனும் எழுத்தே சின்னமாக பயன்படுத்தப்பட்டது. அத்துடன், 'எச்' எனும் சின்னமும் அதில் பயன்படுத்தப்பட்டது.

1984 தொடங்கி 2011 வரையில் இந்த சின்னமே பயன்படுத்தப்பட்டது. இப்போது வெறும் ஹீரோ எனும் எழுத்து மட்டுமே சின்னமாக பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு மேல் 'எச்' என குறிக்கும் சிம்பளும் பயன்படுத்தப்படுகின்றது. மாடர்ன் காலத்திற்கு ஏற்ப மாடர்னான ஸ்டைலில் இந்த லோகோ அமைக்கப்பட்டு உள்ளது.

சின்னம்

எல்எம்எல் (LML)

உலகின் பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் எல்எம்எல் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் 1972 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக வாகன விற்பனையில் களமிறங்கியது. அப்போதே அதன் சின்னமும் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனம் அனைத்து பணிகளில் இருந்து விடுபடுவதாக அறிவித்தது.

தொடர்ந்து, வாகன உற்பத்தியை அது கைவிட்டுவிட்டது. இந்த நிலையிலேயே தன்னுடைய மறு வருகையை நிறுவனம் கடந்த ஆண்டில் அறிவித்தது. கடந்த காலத்தைப் போலில்லாமல் இம்முறை மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளராக நிறுவனம் களமிறங்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து தனது புதிய சின்னத்தையும் அது அறிமுகம் செய்தது. 2022லேயே புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சின்னம்

ராயல் என்பீல்டு (Royal Enfield)

உலகின் மிக மிக பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ராயல் என்பீல்டு இருக்கின்றது. 1901 இல் இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் இங்கிலாந்து நிறுவனத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் தற்போது சென்னையைச் சேர்ந்த ஐஷர் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. இதுவரை இந்த நிறுவனம் இரண்டு முறை லோகோவை மாற்றி இருக்கின்றது.

1901 இல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லோகோ முதல் முறையாக 2013 இல் மாற்றப்பட்டது. இதற்கு பின்னர், 2013 இல் மற்றுமொரு புதிய லோகோவால் மாற்றம் (அறிமுகம்) செய்யப்பட்டது. புது லோகோவில் உள்ள ராயல் என்பீல்டு எனும் எழுத்துக்களில் ஆர் மற்றும் ஓ-வும், இ மற்றும் என்-ம், எல் மற்றும் டி-யும் இணைந்தவாறு எழுதப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 15:16 [IST]
English summary
Top 5 motorcycle manufacturers who changed their logos dramatically
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X