2-வீலரில் ஹீரோ பிராண்ட்-ஐ தான் எல்லாரும் நம்புறாங்க போல!! அடுத்து தான் ஹோண்டாவே உள்ளது!

இந்தியா, மோட்டார்சைக்கிளுக்கான மார்க்கெட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றுள், கடந்த அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த 6 நிறுவனங்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

இந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளவும். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக கடந்த பல வருடங்களாக ஹீரோ மோட்டோகார்ப் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதத்திலும் முதலிடத்தை ஹீரோ தன்வசப்படுத்தி உள்ளது.

top-6 two wheelers sales companies

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 5,59,766 இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 4,42,825 இரு சக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், 2022 அக்டோபரை விட கடந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை 26.41% வளர்ச்சி கண்டுள்ளது.

அதாவது, சுமார் 1,16,941 இரு சக்கர வாகனங்களை கடந்த மாதத்தில் ஹீரோ நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்பிற்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. ஹோண்டா பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 4,62,747 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டாவின் விற்பனையும் 2022 அக்டோபரை விட கணிசமாக உயர்ந்துள்ளது.

top-6 two wheelers sales companies

ஏனெனில், அந்த மாதத்தில் 4,25,969 ஹோண்டா 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த மாதத்தில் 36,778 இரு சக்கர வாகனங்களை அதிகமாக ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இவற்றிற்கு அடுத்து, 3வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் 3,44,957 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது, 2,75,934 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்த 2022 அக்டோபரை காட்டிலும் சுமார் 69,023 யூனிட்கள் அதிகமாகும், அதாவது 25.01%. புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் பஜாஜ் ஆட்டோ கடந்த அக்டோபர் மாதத்தில் 2,78,486 இரு சக்கர வாகனங்கள் விற்பனை உடன் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது. ஆனால், 2022 அக்டோபரில் 2,06,131 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பஜாஜில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-6 two wheelers sales companies

இவை நான்கும் தான் இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் ஃபேன்டாஸ்டிக் ஃபோராக விளங்குகின்றன. ஏனெனில் இவை நான்கில் இருந்து மட்டும் தான் தற்போதைக்கு மாதத்திற்கு 1 இலட்சத்திற்கு மேல் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகுகின்றன. 5வது மற்றும் 6வது இடங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 84,302 மற்றும் 80,958 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ, ஹோண்டா இவை இரண்டும் முன்னிலையில் இருப்பதற்கு, இவை இரண்டிலும் தரமான இரு தயாரிப்புகள் உள்ளன. ஹீரோவில் ஸ்பிளெண்டர், ஹோண்டாவில் ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும். இவை மட்டுமின்றி, வேறு சில தயாரிப்பு வாகனங்களும் ஹீரோ, ஹோண்டாவை இந்தியாவில் விற்பனையில் கொடிக்கட்டி பறக்க வைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, November 5, 2023, 17:21 [IST]
English summary
Top 6 two wheelers sales companies in 2023 october
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X