2முன்னணி நிறுவனங்கள் சேர்ந்தா சும்மாவா!.. இவ்வளவு அசத்தலான பைக்குகளை பஜாஜ்-டிரையம்ப் உருவாக்கும்னு எதிர்பாக்கல

பஜாஜ் (Bajaj)-டிரையம்ப் (Triumph) கூட்டணியில் தயார் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் ஒரு வழியாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. இந்த நிகழ்வு நேற்று (ஜூன் 27) இரவு 11.30 மணி அளவிலேயே அரங்கேறியது. இங்கிலாந்தில் வைத்தே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400 X) ஆகிய இரு மோட்டார்சைக்கிளே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த இரு பைக்குகள் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, புதிய பைக்குகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய டாப் ஐந்து முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Triumph speed 400 scrambler 400 x running shot

டிசைன்: நியோ ரெட்ரோ ரக பைக்காகவே டிரையம்ப்பின் இந்த இரு பைக்குகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக தண்ணீர் துளி வடிவமைப்பைக் கொண்ட ஃப்யூவல் டேங்க் பிரத்யேகமாக இந்த பைக்கில் டிரையமப் பயன்படுத்தி இருக்கின்றது. மேலும், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், திருப்பத்தை வெளிக்காட்ட உதவும் இன்டிகேட்டர்கள், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி மற்றும் எல்இடி வால் பகுதி லைட் ஆகியவற்றை இந்த பைக்குகளில் டிரையம்ப் பயன்படுத்தி இருக்கின்றது.

இவை பைக்கின் அழகிற்கு மேலும் கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் உள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரு மாடல்களும் பார்ப்பதற்கு இரட்டையர்களைப் போல தென்பட்டாலும் சில அம்சங்கள் விஷயத்தில் இரண்டும் மாறுபட்டுக் காட்சிளிக்கின்றன. குறிப்பாக, பிரீமியம் தர வசதிகள் விஷயத்தில் பலமடங்கு வித்தியாசம் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படுகின்றது.

Triumph scrambler 400 x

மோட்டார்: இரு பைக் மாடல்களிலும் 398.15சிசி திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட லிக்யூடு கூல்டு, 4வால்வுகள் கொண்ட டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜினால் 39.5பிஎச்பி பவரை 8,000ஆர்பிஎம்மிலும், 37.5என்எம் டார்க்கை 6,500ஆர்பிஎம்மிலும் வெளியேற்ற முடியும். இத்துடன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் வீல்களுக்கான இயக்க திறன் எக்ஸ்-ரிங் செயின் வாயிலாக கடத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன்: ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களையும் ட்யூப்ளர் ஸ்டீர் பெரிமீட்டர் ஃப்ரேமைக் கொண்டே உருவாக்கி இருக்கின்றது. இத்துடன், இரு பைக்குகளிலும் ட்வின் சைடட் காஸ் அலுமினியம் ஸ்விங்கார்மும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஃப்ரேம்களே பைக்குகளை மிகவும் இலகுவான எடைக் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.

Triumph speed 400

டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் ஒட்டுமொத்த எடையே 170 கிலோ மட்டுமே ஆகும். இதன் ஒட்டி பிறந்த சகோதரனை போல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடலின் எடை 179 கிலோவாக உள்ளது. கூடுதல் சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால் ஸ்பீடு 400 மாடலைக் காட்டிலும் 9 கிலோ கூடுதலாக இது கொண்டிருக்கின்றது.

சஸ்பென்ஷனைப் பொருத்த வரை இரு மோட்டார்சைக்கிள்களிலும் 43 மிமீ அளவுள்ள யுஎஸ்டி பெரிய பிஸ்டன் ஃபோர்க்குகள் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் கேஸ் சார்ஜட் மோனோஷாக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், மாடலுக்கு ஏற்க இந்த சஸ்பென்ஷன் ட்யூன்-அப் செய்யப்பட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், டிராவலின் போது இரு பைக்குகளிலும் வித்தியாசமான ரைடிங் அனுபவம் கிடைக்குமாம்.

ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் ஆஃப்-ரோடு பயன்பாட்டை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் அதன் சஸ்பென்ஷன் செட்-அப் ஸ்பீடு 400 மாடலில் இருப்பதைக் காட்டிலும் கூடுதல் உயரம் கொண்டதாக இருக்கின்றது. ஸ்பீடு 400 பைக்கின் முன் பக்க சஸ்பென்ஷன் 140 மிமீட்டரையும், பின் பக்க சஸ்பென்ஷன் 130 மிமீட்டரையும் கொண்டிருக்கின்றது. இதைவிட 10 மிமீ மற்றும் 20 மிமீட்டர் அதிகம் உயரம் கொண்டதாக ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் சஸ்பென்ஷன்கள் இருக்கின்றன.

பிரேக்கிங் செட்-அப்: பிரேக் விஷயத்திலும் இந்த இரு பைக்குகளும் ஒரே மாிரியானதாகவே இருக்கின்றன. அந்தவகையில், இரு மோட்டார்சைக்கிள்களிலும் 230 மிமீ டிஸ்க் உடன் ஃப்ளோட்டி டைப் காலிபர்கள் பின் வீலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது்துடன், முன் பக்க வீலில் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட டிஸ்க் முன் பக்க வீலில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனுடன் சேர்த்து ஏபிஎஸ் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்: பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் இந்த தயாராகி இருக்கும் இந்த பைக்குகளில் சிறப்பம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், எல்இடி லைட்டுகள், ரைட்-பை-ஒயர் டெக்னாலஜி, டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்விச்சபிள் டிராக்சன் கன்ட்ரோல், இம்மொபிலைசர், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருசக்கர பிரீமியம் தர இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டிரையம்ப்-பஜாஜ் கூட்டணியின்கீழ் உருவாக்கப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை விரைவில் உலக அளவில், இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த பைக்குகளின் வருகைக்காக இந்தியர்கள் பலர் காத்துக் கிடைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 13:30 [IST]
English summary
Top things to know about bajaj triumph jointly made speed 400 and scrambler 400x bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X