ஒரே நாள், ஒரே நேரத்தில் டெலிவரி கொடுக்கப்பட்ட 50 யூனிட் டார்க் க்ரடோஸ் இ-பைக்! திருவிழாவையே மிஞ்சிய சம்பவம்!
ஓர் எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்குதா? என ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தியாவில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் பைக்கின் மாடல் மட்டும் மிக மிக அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த அரிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 50 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் வாடிக்கையாளர்களுக்குடெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாக க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக் இருக்கின்றது. இதன் 50 யூனிட்டுகளே ஒரே நாளில் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

குடி பத்வா எனும் மாராத்தி புத்தாண்டை முன்னிட்டை இந்த சம்பவத்தை டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனையாளர் செய்திருக்கின்றார். ஒரே நேரத்தில் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஓர் எலெக்ட்ரிக் பைக் டெலிவரி கொடுப்பது என்பது புதுமையான நிகழ்வாகும். ஆகையால், இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் தரமான எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் ஒன்றாக டார்க் க்ரடோஸ் இருக்கின்றது. இது ரிவோல்ட், ஹாப் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. டார்க் மோட்டார்ஸ் இந்திய இளைஞர்களை கவரும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் வாயிலாக எந்த நிறுவனத்தின், எந்த மோட்டார்சைக்கிளாக இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இந்த எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்திற்காக கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் டார்க் மோட்டார்ஸ் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிறுவனம் யூஸ்டு டூ-வீலர்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும்.
அதாவது, பழைய இருசக்கர வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகிய செயல்பாடுகளை அது மேற்கொண்டு வருகின்றது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. க்ரடோஸ் மற்றும் க்ரடோஸ் ஆர் ஆகியவையே அவை ஆகும்.
இதில் க்ரடோஸ் தேர்விற்கு ரூ. 1.22 லட்சமும், க்ரடோஸ் ஆர் தேர்விற்கு ரூ. 1.58 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் விலைகளு் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரு தேர்வுகளில் இப்போது க்ரடோஸ் ஆர் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் க்ரடோஸ் ஆர் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. க்ரடோஸ் ஆர் அதிகம் ரேஞ்ஜ் தரும் தேர்வாகும். இது ஓர் ஃபுல் சார்ஜில் 180 கிமீ ரேஞ்ஜ் தரும். இந்த திறனுக்காக 4.0 kWh லித்தியம் அயன்-பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் 9.0 கிலோவாட் பவரை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே க்ரடோஸ் ஆர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதுதவிர நவீன தொழில்நுட்ப வசதிகளாக முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, நான்கு விதமான ரைடிங் மோட்கள், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான பைக்கையே டார்க் மோட்டார்ஸ் தற்போது அதிக எண்ணிக்கையில் டெலிவரி கொடுத்திருக்கின்றது. அதேவேளையில், இந்த இ-மோட்டார்சைக்கிளை நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் இன்றளவும் விற்பனைக்கு வரவில்லை. இந்த பகுதிகளிலும் விற்பனைக்கு வரும் எனில் க்ரடோஸ் பைக்கின் விற்பனை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து வரும் தினங்களில் இந்த மோட்டார்சைக்கிள் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரிவோல்ட் இ-பைக்குகளுக்கு மிக சிறந்த போட்டியாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








