ஏழைகளால் இனி இ-வாகனங்களை வாங்க முடியாது போலிருக்கே.. மத்திய அரசு செஞ்ச வேலை! விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டார்க் மோட்டார்ஸ் (Tork Motors)-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாக க்ரடோஸ் ஆர் (KratosR) எலெக்ட்ரிக் பைக் இருக்கின்றது. இதன் விலையே மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏதோ ஆயிரம், ரெண்டாயிரம் ரூபா மட்டுமே ஏறி இருக்குன்னு நினைச்சுக்க வேண்டாம். பல ஆயிரங்களை நிறுவனம் ஒரேடியாக ஏற்றி இருக்கின்றது. அது 19 ஆயிரம் ரூபாயை ஏற்றி இருக்கின்றது. இதனால், மிகவும் காஸ்ட்லியான பைக்காக டார்க் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக் மாறி இருக்கின்றது.

Tork kratos r price hike

இனி இந்த பைக் ரூ. 1.87 லட்சத்திற்கே விற்கப்படும். இந்த திடீர் விலை உயர்விற்கு முழுக்க முழுக்க நம்முடைய மத்திய அரசாங்கமே காரணமாக இருக்கின்றது. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வந்த மானியத்தை அரசு குறைத்ததே இந்த விலை உயர்விற்கு வழி வகுத்து இருக்கின்றது.

எலெக்ட்ரிக் டூ-வீலரில் உள்ள பேட்டரி பேக்கின் கெபாசிட்டியைப் பொருத்து அது மானியத் தொகையை வழங்கி வந்தது. உதாரணமாக, ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் எனில் ஒவ்வொரு kWh-க்கும் 15 ரூபாய் என 2 kWh 30 ஆயிரம் ரூபா மானியம் வழங்கப்பட்டது.

tork kratos r e-bike price hiked

இந்த மானியத்தொகையை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அரசு குறைத்திருக்கின்றது. ஆகையால், 1 kWh-க்கு இப்போது ரூ. 10 ஆயிரம் மட்டுமே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இதன் விளைவாகவே தற்போது நாட்டில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிரடியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

சமீபத்தில், ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஆம்பியர் உள்ளிட்ட மின் வாகன உற்பத்தியாளர்கள் விலை உயர்வை அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்தே தற்போது டார்க் க்ரடோஸும் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றது. அரசின் மானியத் தொகை குறைப்பு நடவடிக்கை ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேநேரத்தில் இதன் விலை உயர்வை நினைத்து சென்னைவாசிகள் கவலையேப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த வாகனம் சென்னையில் விற்பனையில் இல்லை. அதேவேளையில், புதுச்சேரி மக்கள் இந்த விலை உயர்வை நினைத்து கட்டாயம் கவலைப்பட்டே ஆக வேண்டும். ஏனெனில், பாண்டியில் க்ரடோஸ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

க்ரடோஸ் ஆர் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது விற்பனைக்கு வந்த புதிதில் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த இ-பைக்கில் ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் பிஎம்எஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 12 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதனால் மணிக்கு 105 கிமீ வேகத்தில் போக முடியும். அதேநேரத்தில் வெறும் 3.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை அது எட்டிவிடும். இந்த பைக்கில் 4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் நம்மால் 120 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனைத்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் மானியக் குறைப்பால் விலை உயர்வைச் செய்து வருகின்றன. விரைவில் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இப்போதைக்கு விலை உயர்வைச் செய்யப் போவதில்லை என கூறி இருக்கின்றது

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 9:01 [IST]
English summary
Tork motors hikes kratos r electric bike price here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+