சாஃப்ட்வேரை அப்டேட் செய்தால் 150 கிமீ வரை போகும்.. புதிய ரைடிங் மோடை அறிமுகம் செய்ய டார்க் மோட்டார்ஸ்!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டார்க் மோட்டார்ஸ் (Tork Motors)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாக க்ரடோஸ் ஆர் (Kratos R) இருக்கின்றது.

இந்த ஒற்றை தயாரிப்பை மட்டுமே இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனையே கூடுதல் தற்போது சிறப்பானதாக நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது. அதாவது, டார்க் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கில் புதிதாக ஈகோ பிளஸ் (Eco+) எனும் ரைடிங் மோடை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ரைடிங் மோடை பயன்படுத்தி பைக்கில் சவாரி செய்தால் 150கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Tork kratos r eco plus ride

இது ரியல் வேர்ல்டு ரேஞ்ஜ் திறன் ஆகும். அதாவது, பயன்பாட்டின் போது வழங்கக் கூடிய ரேஞ்ஜ் திறன். தேவையில்லாமல் மின்சாரம் விரையமாவதை தவிர்க்கக் கூடிய ஓர் மோடே இந்த புதிய ஈகோ பிளஸ் ரைடிங் மோட் ஆகும். குறிப்பாக, இது வேகத்தைப் பெருமளவில் குறைக்கும் மோடாக உள்ளது.

ஆமாங்க, இந்த மோடில் பயணிக்கும்போது எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 35 கிமீ வேகத்தைத் தாண்டாது. என்னங்க இது க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் ஸ்பீடேவானு நினைச்சிக்காதீங்க. இந்த அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த உச்சபட்ச வேகத்தை ஸ்போர்ட் (Sport) எனும் மோடில் மட்டுமே நம்மால் எட்ட முடியும்.

இதுதவிர, ஈகோ (Eco) மற்றும் சிட்டி (City) உள்ளிட்ட மோட்களும் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ரைடிங் மோடை ஏற்கனவே க்ரடோஸ் ஆர் பைக்கை வாங்கிய வாடிக்கையாளர்களாலும் பெற்றுக் கொள்ள முடியம்.

ஓவர் தி ஏர் அப்டேட் வாயிலாக இதனை பெற்றுக் கொள்ள முடியும் என நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த ஈகோ பிளஸ் ரைடிங் மோட் மிகவும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்றதாக உள்ளது. குறிப்பாக, வாகன நெரிசல் மிகுந்த நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற நகரங்களின் பயன்பாட்டிற்கு உகந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ. 1.67 லட்சம் ஆகும். இது புனே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இப்போதைய நிலவரப்படி நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எலெக்ட்ரிக் பைக்கின் அதிக ரேஞ்ஜ் திறனுக்கு அதில் வழங்கப்பட்டு இருக்கும் பெரிய பேட்டரி பேக்கே காரணமாக உள்ளது.

4.0 kWh லித்தியம் அயன்-பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் 9.0 கிலோவாட் பவரை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே க்ரடோஸ் ஆர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் பீக் பவர் 9.0 கிலோவாட் ஆகும். மேலும், இது 38 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.

இதுதவிர நவீன தொழில்நுட்ப வசதிகளாக முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரை, 4வே ஜாய் ஸ்டிக், ரிவர்ஸ் மோட், டிஸ்க் பிரேக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், செல்போன் இணைப்பு அம்சம், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட அம்சங்கள் க்ரடோஸ் ஆர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது தவிர திருட்டை தவிர்க்கும் வசதி, ஜியோ ஃபென்சிங், ஸ்டோரேஜ் பாக்ஸ் போன்ற வசதிகளும் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூப்பரான பைக்கையே மேலும் சிறப்பானதாக மாற்றும் விதமாக டார்க் மோட்டார்ஸ் புதிதாக ஈகோ பிளஸ் எனும் ரைடிங் மோடை அந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டார்க் க்ரடோஸ் ஆர் இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது வேதனை அளிக்கும் தகவலாக உள்ளது. விரைவில் இந்த விஷயத்தில் நிறுவனம் மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் அடுத்த அறிமுக நகரங்களின் பட்டியலில் சேலம் போன்ற நகரங்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 18:08 [IST]
English summary
Tork motors introducing all new eco plus ride mode on it s kratos r e bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+