இந்த பைக்குக்கு பெட்ரோலே தேவையில்லை! அதுக்காக பொம்மைன்னு நினைச்சுடாதீங்க! ஸ்பீடு சும்மா நின்னு பேசும்!

டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிரட்டோஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கை அந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் டூவீலர்களை அதிகம் வாங்கி வருகின்றனர். ஆனால் இதில் ஸ்கூட்டர்கள் மீது மக்கள் மோகம் அதிகமாக இருக்கும் நிலையில் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த பைக்குக்கு பெட்ரோலே தேவையில்லை! அதுக்காக பொம்மைன்னு நினைச்சுடாதீங்க! ஸ்பீடு சும்மா நின்னு பேசும்!

இந்நிலையில் நொய்டா பகுதியில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிரட்டோஸ் எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங் 2023ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் இந்த காருக்கான டெஸ்ட் ரைடு துவங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை அந்த காலகட்டத்தில் டெஸ்ட் ரைடு செய்யலாம்.

டெஸ்ட் ரைடிற்கு பிறகு இந்த பைக்கிற்கான புக்கிங்கள் துவங்கும். அதன் பின்னர் ஜூன் மாதம் இந்த பைக்கிற்கான டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பைக்கை அதன் கிரட்டோஸ் ஆர் பைக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை சொகுசான ரைடு என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த பெர்ஃபாமென்ஸிற்காக சிறப்பான பவர் டெரைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகமான டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இந்த பைக்குக்கு பெட்ரோலே தேவையில்லை! அதுக்காக பொம்மைன்னு நினைச்சுடாதீங்க! ஸ்பீடு சும்மா நின்னு பேசும்!

இந்த டார்க் கிராட்டோஸ் எக்ஸ் பைக்கில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் அண்ட்ராய்டு நேவிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது போக இந்த பைக் நீண்ட தூரப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சார்ஜிங் அம்சத்தை பொருத்தவரை ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. மேலும் FFமோட் வசதி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குக்கு பெட்ரோலே தேவையில்லை! அதுக்காக பொம்மைன்னு நினைச்சுடாதீங்க! ஸ்பீடு சும்மா நின்னு பேசும்!

இந்த பைக் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கபில் ஷில்கே கூறும் போது : "எங்கள் நிறுவனத்தின் முக்கியமான மைல்கல் தினம் இன்று, நாங்கள் வேகமான, சிறப்பான, அதிக டார்க் திறன் கொண்ட கிரட்டோஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை முற்றிலுமாக எங்கள் குழுவில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களே வடிவமைத்துள்ளனர். பல ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகு வாடிக்கையாளர்களிடம் பல கருத்துக்கள் கேட்கப்பட்ட பின்பு இந்த வடிவமைப்பைக் கொடுத்துள்ளோம். கிரட்டோஸ் எக்ஸ் பைக் ஃபன் ரைடு ஏற்ற வாகனமாக இருக்கும். இது எங்கள் வெற்றிக் கதையில் நிச்சயம் இடம் பெறும்." எனக் கூறினார்.

இந்த அறிமுகத்திற்குப் பிறகு டார்க் மோட்டார் நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு கிரட்டோஸ் பைக் நிறுத்தப்பட்டு புதிய கிரட்டோஸ் ஆர் மற்றும் புதிய கிரட்டோஸ் எக்ஸ் ஆகிய பைக்குகளை மட்டுமே தயாரிக்கும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பைக்கின் பேட்டரி ரேஞ்ச் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் போது தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 17:04 [IST]
English summary
Tork Motors showcased Kratos x electric bike in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+