13லட்ச ரூபாக்கு விற்பனைக்கு வந்த பைக்! அப்படி என்ன இருக்கு இந்த பைக்குல? 2செகண்ட் ஹேண்ட் இன்னோவவை வாங்கிடலாம்!
இந்தியாவில் கார்களுக்கு இணையான விலைக் கொண்ட பைக்குகளின் எண்ணிக்கை ஏற்கனவே பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில், இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), அதன் அதீத விலைக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
டிரையம்ப் அதன் அப்டேட் செய்யப்பட்ட டைகர் 900 (Tiger 900) மோட்டார்சைக்கிளையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். ஜிடி (GT) மற்றும் ரேலி ப்ரோ (Rally Pro), இவையே டைகர் 900இல் வழங்கப்படும் அந்த இரண்டு தேர்வுகள் ஆகும்.

முன்னதாக, ரேலி (Rally) என்கிற தேர்விலும் இந்த பைக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இந்த தேர்வு வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. உலக நாடுகளிலும் இதே நிலையே இந்த தேர்விற்குக் காணப்படுகின்றது. டிரையம்ப் டைகர் ஜிடி வேரியண்டிற்கு ரூ. 13.95 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளையில், ரேலி ப்ரோவிற்கு ரூ. 15.95 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். புதுப்பித்தலின் அடிப்படையில் இதன் விலைகள் லேசாக ஏற்றப்பட்டு இருக்கின்றன. இதே பைக்கின் அப்டேட் செய்யப்படாத ஜிடி வேரியண்ட் இப்போதைய விலையைவிட ரூ. 15 ஆயிரம் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைத்தது.

இதேபோல், ரேலி ப்ரோ வேரியண்ட் ரூ. 45 ஆயிரம் குறைவான விலையிலும் விற்கப்பட்டது. அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே தொடங்கப்பட இருக்கின்றது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் 888 சிசி திறன் கொண்ட இன்-லைன் 3 சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 106 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 13 பிஎச்பி மற்றும் 3 என்எம் அதிகம் ஆகும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே புதிய அப்டேட் செய்யப்பட்ட மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

நீண்ட தூர டிராவலுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிள் ஆகும். காரில் அமர்ந்து பயணிப்பதைப் போன்ற கம்ஃபோர்ட்டான ரைடிங் அனுபவம் இந்த பைக்கில் கிடைக்கும். குறிப்பாக, இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்ற மோட்டார்சைக்கிள் இது என கூறப்படுகின்றது. இதற்காக மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மர்சோச்சியின் அப்-சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோனோஷாக் மேனுவல் ப்ரீலோடு மற்றும் ரீபவுண்ட் அட்ஜெஸ்ட்மென்ட் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் டவுன்-சைடு ஃபோர்க் மேனுவல் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் கம்பிரஸ்ஸன் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த பைக்குகளில், 7 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அதிநவீன வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் இந்த பைக் தாங்கி இருக்கின்றது. இதனால்தான் இதன் விலையும் பலமடங்கு அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களுக்கு இணையான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகிளின் எண்ணிக்கைக்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாகவே டிரையம்ப் டைகர் 900 பைக்கின் வருகை அமைந்திருக்கின்றது. அஜித் போன்ற நீண்ட தூர டிராவலை மேற்கொள்வோர் மத்தியில் இத்தகைய பைக் மாடல்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்த பைக்கிற்கும் சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









