ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த ஆப்பை வைத்த டிரையம்ப்! ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் பைக் அறிமுகம்! விலை இவ்வளவு தானா?
டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் தனது கூட்டணியாக இரண்டாவது புதிய பைக்கை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் என்ற பைக் இன்று ரூபாய் 2.63 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்து தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் டிரையம்ப் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இதன்படி தனது முதல் தயாரிப்பாக ஸ்பீடு 400 என்ற பைக்கை கடை சில மாதங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் டிரையம்ப் நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பாக ஸ்கிராம்ப்ளர் 400 பைக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிள் தற்போது டிரையம்ப் டீலர் ஷிப்களில் புக் செய்யலாம் என அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் புக்கிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
டிரையம்ப் நிறுவனம் இந்த ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கை அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கை ஓட்டும் ரைடர் எந்தவிதமான சாலைகளிலும் எந்தவித எக்ஸ்ட்ரா முயற்சியும் இல்லாமல் உடனடியாக புஷ்ஷை பெற முடியும். இதனால் ரைடிங் ஸ்மூத்தாக இருக்கும்.

அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் உறுதியான பிரேம்களை கொண்டு இந்த பைக்கை தயாரித்து உள்ளதாகவும், இந்த பைக் ஆஃப் ரோடு அம்சங்கள் கொண்டுள்ளதாகவும், இது செக்மெண்டிலேயே இந்த பைக் தனித்து தெரியும் வகையில் வடிவமைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோட்டில் செல்லும் போது ரோடு பிரெஸென்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேண்டில் பார்கள் இதில் உள்ள ரப்பர் அகற்றக் கூடிய தன்மை வாய்ந்ததாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக ரிலாக்ஸான ஸ்கிராம்ப்ளர் எர்கோனாமிக்ஸ் மற்றும் அப்செட் எக்ஸாஸ்ட் ஆகிய இந்த பைக்கில் உள்ளன.

இந்த பைக்கில் 50 மிமீ கூடுதலான நீண்ட தூர பயணத்திற்கு உதவியான சஸ்பென்ஷன் 195 மீமி கிரவுண்ட் கிளியரன்ஸ் 835 மீமி சீட்டு உயரம் ஆகியன இந்த பைக்கை அதன் செக்மெண்டிலேயே தனித்து தெரியும் வகையில் வித்தியாசமாக வடிவமைத்துள்ளது டிரையம்ப் நிறுவனம்.
இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை நிறுவனம் ஸ்பீடு 400 பைக்கில் பயன்படுத்திய அதே இன்ஜின் தான் இதிலும் பயன்படுத்தியுள்ளது. இது 398.15 சிசி இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது 39.5 பிஎச்பி பவரையும் 37.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை பொருத்தவரை முன்பக்கம் 19 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 185 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இது ஸ்பீடு 400 பைக்கை விட 9 கிலோ அதிக எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கின் விலையை பொறுத்தவரை ரூபாய் 2.62 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஸ்பீடு 400 பைக்கின் விலையை விட ரூபாய் 30,000 அதிகமாகும்.
இந்த பைக்குக்கு போட்டியாக மார்க்கெட்டில் யெஸ்டி ஸ்கிரம்பிலர் பைக் இருக்கிறது. இது ரூபாய் 2.10 லட்சம் என்ற விலையில்தான் விற்பனையாகிறது என்றாலும் இந்த பைக்கில் உள்ள பவர் டிரையம்ப் பைக்கில் உள்ள பவருக்கு இணையாக கருத முடியாது. அதனால் இந்த இரண்டையும் ஒப்பிடுவது தவறு.
பவர் வாரியாக டிரையம்ப் பைக்குக்கு சமமான பைக் என்றால் கேடிஎம் 390 அட்வெஞ்ச்சர் பைக்கை சொல்லலாம் இந்த பைக் ரூபாய் 2.81 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதாவது ஸ்கிராம்ப்ளர் 400x பைக்கை விட ரூபாய் 18000 அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனம் இந்தியாவிற்குள் பஜாஜ் நிறுவனம் மூலம் காலடித்தடத்தை எடுத்து வைத்ததன் மூலம் இந்தியாவில் 400 சிசி செக்மெண்டில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. தற்போது வரை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் இந்த செக்மெண்டில் அதிகமான விற்பனையை பெற்று வந்தாலும், இனி டிரையம்ப் நிறுவனமும் ஓரளவு நல்ல விற்பனையை பெற்று மார்க்கெட்டில் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









