இந்த டிரையம்ப் பைக்கை இப்போதே வாங்கி போடுவது புத்திசாலித்தனம்!! இல்லைனா அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்பீடு 400 மோட்டார்சைக்கிளின் விலையை கணிசமாக அதிகரிக்க தயாராகி வருகிறது. ஆதலால் இப்போது எவ்வளவு குறைவான விலையில் இந்த டிரையம்ப் பைக்கை வாங்கலாம் என்பதை பற்றியும், ஸ்பீடு 400 பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தைக்கு ஏற்ப குறைந்த விலையில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய பைக், ஸ்பீடு 400 ஆகும். ஸ்க்ராம்ப்ளர் 400 என்ற இந்த பைக்கின் மற்றொரு வெர்சனும் விற்பனைக்கு வந்தது. இந்த இரு 400சிசி டிரையம்ப் பைக்குகளும் நல்லப்படியாகவே விற்பனையாகி வருகின்றன. இதில் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இது அறிமுக விலை என்றும், 2024ஆம் ஆண்டில் இருந்து ரூ.10,000 அதிகரிக்கப்பட்டு ரூ.2.33 லட்சத்தில் இந்த பைக் கிடைக்கும் எனவும் கடந்த ஜூலை மாதத்தில் ஸ்பீடு 400 பைக்கை அறிமுகப்படுத்திய போதே டிரையம்ப் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் ஒருமுறை டிரையம்ப் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது.
இந்திய மார்க்கெட்டிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த டிரையம்ப் பைக் 2023 ஜூன் இறுதியில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாகவே இந்தியாவில் ஜூலை மாத துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே பைக்கின் விலை அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகள் துவங்கப்பட்டன. பின்னர், சில வாரங்கள் கழித்து டெலிவிரிகள் துவங்கின.

டிரையம்பின் ரோட்ஸ்டர்-ஸ்டைல் பைக்கான ஸ்பீடு 400 மற்ற டிரையம்ப் பைக்குகள் அளவிற்கு இல்லையென்றாலும் கொடுக்கும் பணத்திற்கு இணையாக மிட்-ரேஞ்சில் செயல்படுதிறனை வழங்கக்கூடியது. இந்த பைக்கின் ஹேண்டிலிங் சிறப்பாக உள்ளதாக ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பைக்கை ஓட்டிப் பார்த்து டெஸ்ட் ரைடு ரிவியூ வழங்கியுள்ளோம்.
கிளாசிக்கான தோற்றம் கொண்டாலும், ஸ்பீடு 400 பைக்கில் இடம்பெற்றுள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் யாவும் மாடர்ன் தரத்திலானவை. டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மற்றும் 1200 பைக்குகள் போன்றதான தோற்றத்தை கொண்டது ஸ்பீடு 400 ஆகும். அதுவே, சற்று தாமதமாக கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்க்ராம்ப்ளர் 400 ஆனது டிரையம்ப்பின் வழக்கமான ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் தோற்றத்தை கொண்டுள்ளது.

எந்தவொரு வயதினரும் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் ஓட்டும் வகையில் இந்த பைக்குகளை டிரையம்ப் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்பீடு 400 பைக்கின் மூலம் நாடு முழுவதும் 40க்கும் அதிகமான நகரங்களில் 50க்கும் அதிகமான ஷோரூம்களுக்கு தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. 2024 ஏப்ரலுக்குள் நெட்வொர்க்கை இந்தியாவில் 80 நகரங்களுக்கு விரிவுப்படுத்தும் முனைப்பில் டிரையம்ப் உள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், வருகிற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.33 இலட்சமாக அதிகரித்துவிடும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகளை www.triumphmotorcyclesindia.com/booking என்ற டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் முன்பதிவு செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்பில் எப்படியாவது ஒரு பைக்கை வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்கள் ஸ்பீடு 400-ஐ தாராளமாக வாங்கலாம். ஏனெனில், இந்தியாவில் இப்போதைக்கு இதுதான் விலை குறைவான பைக் ஆகும். விலை அதிகரிக்கப்பட உள்ளது என எந்த நிறுவனமும் எச்சரிக்கை செய்யாது. ஆனால், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நினைவுப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









