விலை கம்மினு சொல்லி நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க! டிரையம்ப் ஸ்பீடு 400ன் ஆன்ரோடு விலை இவ்வளவு அதிகமா?..

பஜாஜ்-டிரையம்ப் இரு நிறுவனங்களின் கூட்டணியில் டிரையம்ப் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களே ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை ஆகும். இந்த இரு பைக்குகளும் மிக சமீபத்திலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மிக மிக மலிவு விலையும் அவற்றிற்கு நிர்ணயம் செய்யப்பட்டன.

ஆகையால், டிரையம்ப் நிறுவனத்தின் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களாக அவை மாறின. இதனாலேயே பலர் இந்த பைக்குகளை புக் செய்ததையையும் நம்மால் பார்க்க முடிகின்றது. குறிப்பாக, அறிமுக சிறப்பு ஆஃபராக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பீடு 400 பைக்கை ரூ. 2.23 லட்சத்திற்கு விற்பனைச் செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

Triumph speed 400

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இந்த விலையே வாங்குபவர்களை மேலும் தூண்டும் வகையில் அமைந்தது. இந்த ஆஃபர் முடிந்த பின்னர் இதே ஸ்பீடு 400 பைக் ரூ. 2.33 லட்சத்திற்கு விற்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மிகவும் அதிர்ச்சிகரமான ஓர் தகவல் ஸ்பீடு 400 பைக் விலை பற்றி தற்போதுவெளியாகி உள்ளது.

எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.33 லட்சத்திற்கு விற்கப்படும் ஸ்பீடு 400 பைக்கின் விலை ஆன்-ரோடில் ரூ. 3.38 லட்சமாக இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் மிகப் பெரிய அதிர்வலையை இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.

Triumph speed 400 on-road price details

டெலிவரி கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் என்கிற பெயரில் நிறுவனம் மிக பெரிய தொகையை நிர்ணயித்திருப்பதாக ஓர் ஆவணம் வெளியாகி உள்ளது. இதுவே பலரின் அதிர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. பலர் இந்த மோட்டார்சைக்கிள்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வந்திருப்பதாக நினைத்து புக்கிங்கை செய்து வரும்நிலையிலேயே இந்த பேரிடியை அளிக்கும் விலை விபரம் வெளியாகி இருக்கின்றது.

அந்த பில்லில் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 2.33 லட்சம் என்றும், சாலை வரி ரூ.46,553 என்றும், டெலிவரிக்கான கட்டணமாக ரூ.17,000 நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் அடங்கி இருக்கின்றன. இதுதவிர, பதிவு மற்றும் ஆர்டிஓ-விற்கான கட்டணம் என ரூ.3,937ம், ஆர்எஸ்ஏ-வுக்கான கட்டணம் ரூ.6,016ம், இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.23,592ம் மற்றும் இன்ட்ரோ கிட்-க்கு ரூ.8,500ம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அந்த பில்லின் படம் தெரிவிக்கின்றது.

Triumph speed 400 side view

இவை அனைத்தும் சேர்ந்து எக்ஸ்-ஷோரூமைக் காட்டிலும் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பைக்காக ஸ்பீடு 400-ஐஆன்-ரோடில் மாற்றி இருக்கின்றது. இந்த பில்லே காட்டு தீயை போல் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதன் உண்மை நிலை அறிந்துக் கொள்ளலாம் என சென்னையில் உள்ள அதிகாரப்பூர்வ டிரையம்ப் பைக் விற்பனையாளரை நாங்கள் தொடர்பு கொண்டோம்.

ஆனால், அவர்கள் எங்களது அழைப்பை ஏற்கவில்லை. மேலும், இதுகுறித்து அறிந்துக் கொள்ள மின்னஞ்சலை அனுப்பி இருக்கின்றோம். விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அந்த பில் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது.

Triumph speed 400 rear view

தற்போது இந்த தகவல் பஜாஜ்-டிரையம்ப் இரு நிறுவனங்களின் காதுகள் வரை சென்றிருக்கின்றது. ஆகையால், இந்த வதந்திக்கு முற்று புள்ளிவைக்கும் விதமாக ஓர் அறிவிப்பை நிறுவனம் அது வெளியிட்டு இருக்கின்றது. அதில், விரைவில் ஆன்-ரோடு விலை விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. வரும் 10 ஜூலை அன்றே மாநில வாரியான ஆன்-ரோடு விலை விபரம் அறிவிக்கப்பட இருக்கின்றது. தற்போது இந்த தகவலுக்கு பலரும் காத்திருக்க தொடங்கி இருக்கின்றனர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் மற்றும் ஸ்கிராம்பளர் 400எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் பிரீமியம் தர அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஸ்விட்சபிள் டிராக்சன் கன்ட்ரோல் கொண்ட ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க் (முன்-பக்கம்) மற்றும் ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் (பின்-பக்கம்), 300டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவையே ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், அனலாக் ஸ்பீடோ மீட்டருடன் கூடிய எல்சிடி திரை போன்றவையும் ஸ்பீடு 400 வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அதிக பவர்ஃபுல்லான எஞ்ஜினையே இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர். 398.15சிசி, லிக்யூடு கூல்டு டிஓஎச்சி, 4வால்வுகள் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 39.5பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 37.5என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் மலிவு விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்ற காரணத்தினாலேயே பலர் அதை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அதன் விலை ஆன்-ரோடில் மூன்றரை லட்சத்தை தொடும் என தகவல் வெளியாகி இருப்பது அதன் விற்பனையை பாதிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 16:30 [IST]
English summary
Triumph speed 400 on road price rs 3 lakh here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X