பஜாஜ் டோமினாரை வாங்கலாமா? (அ) புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பக்கம் செல்லலாமா? ஒரே குழப்பமா இருக்கா?

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு புதிய பைக்குகளை வடிவமைத்து சமீபத்தில் வெளியீடு செய்தது. இதில் ஸ்பீடு 400 பைக்கிற்கு, பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் 400 பைக் விற்பனையில் போட்டியாக விளங்கக்கூடும். இந்த இரு 400சிசி பைக்குகளுக்கு இடையேயான ஒற்றைமை & வேற்றுமைகள்...

டிசைன்: இரண்டும் 400சிசி பைக்காக இருப்பினும் இரண்டிற்கு இடையே விலை பெரிய வித்தியாசமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இவற்றிற்கு இடையேயான தோற்ற வேறுப்பாடுகள் ஆகும். ஏனெனில் புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 ஆனது நியோ-ரெட்ரோ தீம்டு மோட்டார்சைக்கிள் ஆகும். ஆனால், பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள். ஆதலால் இவை இரண்டையும் தோற்றத்தில் நம்மால் ஒப்பீடு செய்யவே முடியாது.

triumph speed 400 vs bajaj dominar 400

என்ஜின் அமைப்பு: டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் 398.15சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, DOHC, ஓவர் ஸ்கொயர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 39.5 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 37.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். அதுவே, டோமினார் 400 பைக்கில் பொருத்தப்படும் 373.3சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, DOHC என்ஜின் 8,800 ஆர்பிஎம்-இல் 39.5 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சேசிஸ் & சஸ்பென்ஷன்: டோமினார் 400 பைக்கை பீம்-டைப் பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் கேஸ்ட் ஸ்விங்கார்மில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வடிவமைக்கிறது. இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 135மிமீ டிராவல் உடன் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 110மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

triumph speed 400 vs bajaj dominar 400

மறுப்பக்கம், புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் ட்யூப்லர் ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேமின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், போல்ட்-ஆன் சப் ஃப்ரேம் மற்றும் இரட்டை-பக்க கேஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்மும் இந்த பைக்கின் வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பைக்கில் 140மிமீ டிராவல் உடன் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், 130மிமீ டிராவல் உடன் கேஸ்-சார்ஜ்டு மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

பரிமாண அளவுகள் & எடை: புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் நீளம் 2,056மிமீ, அகலம் 795மிமீ, உயரம் 1,075மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 1,377மிமீ ஆகும். இந்த பைக்கின் எடை ஆனது 170 கிலோ ஆகும். பஜாஜ் டோமினார் 400 பைக்கின் நீளம் 2,156மிமீ, அகலம் 863மிமீ, உயரம் 1,243மிமீ மற்றும் வீல்பேஸ் 1,453மிமீ ஆகும். இந்த பைக்கின் எடை புதிய ஸ்பீடு ட்வின் பைக்கின் எடையை விட 23 கிலோ அதிகம் ஆகும்.

triumph speed 400 vs bajaj dominar 400

பிரேக்குகள்: புதிய ஸ்பீடு 400 பைக்கின் முன் சக்கரத்தில் 300மிமீ அளவிலும், பின் சக்கரத்தில் 230மிமீ அளவிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே மறுப்பக்கம், டோமினார் 400 பைக்கின் முன் சக்கரத்தில் 320மிமீ அளவிலும், பின் சக்கரத்தில் அதே 230மிமீ அளவிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் நிறுவனங்களில் உருவாக்கப்படுகின்றன என்பதை தவிர்த்து இந்த இரு 400சிசி பைக்குகளுக்கு இடையே பெரியதாக எந்த ஒற்றுமையும் இல்லை. என்ஜின் மட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அளவில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவும் ஸ்பீடு 400 பைக்கை டெஸ்ட் ரைடு செய்து பார்த்தால் மட்டுமே இரண்டும் ஒன்றா என்பது தெரியவரும். டோமினார் 400 பைக்கின் விலையில் ஸ்பீடு 400 பைக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 23:20 [IST]
English summary
Triumph speed 400 vs bajaj dominar 400 specs comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X