செமயா வீலிங் பண்ணலாம்! எக்ஸாஸ்ட் சவுண்ட் வேற லெவல்ல இருக்குது! டிரையம்ப் ஸ்பீடு 400 ரிவியூ இதோ!
டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்த்து பைக்குகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதன் படி முதன் பைக்காக ஸ்பீடு 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விரிவான விமர்சனத்தை தான் இங்கே வீடியோவாக பார்க்கப்போகிறோம்.
இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. எங்கள் குழுவிலிருந்து Ghosty இதை ஓட்டி பார்க்க புனோவிற்கு விரைந்தார். அங்கு இவர் இந்த பைக்கை ஓட்டி பார்த்த அட்டகாசமான அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த பைக்கிற்கு அவர் அளித்த வீடியோ விமர்சன வீடியோவை கீழே உங்களுக்காக இணைத்துள்ளோம்.
இந்த டிரைம்யம் ஸ்பீடு 400 பைக்கை பொருத்தவரை 398 சிசி சிங்கிள் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்ஷன், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உராய்வுகளை குறைக்க டிஎல்சி கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 39.5 பிஎச்பி பவரையும், 37.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் மார்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. மேலும் இதே செக்மெண்டில் ஜாவா-யெஸ்டி மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதற்கிடையில் ஹார்லிடேவிட்சன் நிறுவனமும் இதே செக்மெண்டில் புதிதாக ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து விற்பனைக்கு வருகிறது. விற்பனையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








