ஓராண்டு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் பைக்குகள் வெளியீடு! நல்லா இருக்கே ஏன் குறைவான நாளுக்கு விற்க போறாங்க!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிரையம்ப் (Triumph)-ம் ஒன்றாகும். இதன் தயாரிப்புகள் உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. மிக சிறந்த வரவேற்பைப் பெற்ற வண்ணம் டிரையம்ப் பைக்குகள் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே நிறுவனம், ஓர் சிறப்பு பதிப்பை (Special Edition) அறிமுகப்படுத்தி, அது இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்தி இருக்கின்றது. அது அறிமுகம் செய்திருக்கும் சிறப்பு பதிப்பானது மிகவும் அழகிய மற்றும் அதிக அலங்காரங்களைக் கொண்டதாக இருக்கின்றது.

Triumph stealth edition unveiled

நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த சிறப்பு பதிப்பு ஒரு வருடத்திற்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிகின்றது. ஸ்டீல்த் எடிசன் எனும் பெயரிலேயே தன்னுடைய சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள்களை அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. மேலும், இந்த அறிவிப்பானது உலக சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி இந்தியாவிலும் இந்த சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. எட்டு மாடல்களின் ஸ்டீல்த் எடிசனை அது அதன் வலைதளத்தில் விலையுடன் பட்டியலிட்டு இருக்கின்றது. ஸ்கிராம்ப்ளர் 900, பாபர், ஸ்பீடு ட்வின் 900, ஸ்பீடு ட்வின் 1200, ஸ்பீடு மாஸ்டர், பான்னேவில் டி120 மற்றும் பான்னேவில் டி100 ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களிலேயே ஸ்டீல்த் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

இந்த மோட்டார்சைக்கிள்கள் அனைத்தும் சாதாரணமாக பார்க்கும்போதே மிகவும் அழகானதாக இருக்கும். அழகாக மட்டுமல்ல சில மோட்டார்சைக்கிள்கள் மிகவும் முரட்டுத் தனமாகவும் காட்சியளிக்கும். இவற்றையே கூடுதல் அலங்கரிப்பின் வாயிலாக மேலும் அதிக கவர்ச்சி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வாகனமாக டிரையம்ப் மாற்றி இருக்கின்றது.

ஆகையால், வரும் நாட்களில் அது இரட்டிப்பான விற்பனையைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமான பைக் மாடல்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான தோற்றம் கொண்டதாக இந்த ஸ்டீல்த் எடிசன் பைக்குகள் காட்சியளிக்கின்றன. இதற்கு அது பயன்படுத்தி இருக்கும் புதிய பெயிண்ட் ஸ்கீமே காரணம் ஆகும்.

நிறுவனம் பாப்பர் மோட்டார்சைக்கிளுக்கு பர்பிள் நிறத்தையும், ஸ்கிராம்ப்ளர் 900 மாடலுக்கு ஆரஞ்சு நிறத்தையும் பயன்படுத்தி இருக்கின்றது. இதேபோல், ஸ்பீடு ட்வின் 900 மாடலுக்கு பச்சை நிறமும், ஸ்பீடு ட்வின் 1200 மற்றும் ஸ்பீடு மாஸ்டர் மாடல்களுக்கு சிவப்பு நிறத்தையும், பான்னேவில் டி120க்கு கருப்பு மறஅறும் நீல நிறத்தையும், பான்னேவில் டி100க்கு நீல நிறத்தையும் டிரையம்ப் பயன்படுத்தி இருக்கின்றது.

அனைத்தும் நிறங்களும் ஹேண்ட் பெயிண்டட் என கூறப்படுகின்றது. இந்த தனித்துவமான நிறத் தேர்வுடன் சேர்த்து பிரேத்யேக பேட்ஜ்கள் மற்றும் கூடுதல் அணிகலன்களையும் இந்த மாடல்களில் டிரையம்ப் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று சிறப்பு அலங்காரங்களை இந்த பைக்குகள் கொண்டிருப்பதால் விலையில் சற்று அவை காஸ்ட்லியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்த சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப் மையங்களை வந்தடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஸ்டீல்த் சிறப்பு பதிப்பு மோட்டார்சைக்கிள்களின் விலையை டிரையம்ப் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இதுபோன்ற நிற அலங்காரம் மற்றும் அணிகலன் அலங்காரம் ஆகியவை மட்டுமே இந்த பைக்குகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மெக்கானிக்கல் விஷயத்தில் டிரையம்ப் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், எஞ்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றில் வழக்கமான பதிப்புடன் ஸ்டீல்த் எடிசன் அப்படியே ஒத்துப் போகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் இந்தியாவில் இந்த பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதால் வரும் பண்டிகை நாட்களில் சற்று கணிசமான அளவு விற்பனை வளர்ச்சியை நிறுவனம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை உறுதியாக சொல்ல முடியாது. இந்தியர்களின் மன நிலையை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 5:00 [IST]
English summary
Triumph stealth edition unveiled here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+