வதவதன்னு ஒரே நாளில் 8 பைக்குகளை அறிமுகப்படுத்திய டிரையம்ப்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

டிரையம்ப் நிறுவனம் கோவாவில் தற்போது நடந்து வரும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் தனது போனவில் ஸ்டெல்த் எடிசன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வித்தியாசமான டிசைன் அமைப்புகள் மற்றும் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட பைக்காக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஏற்கனவே வெளிநாடுகளில் அறிமுகமான நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவாவில் தற்போது நடந்து வரும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் டிரையம்ப் நிறுவனம் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அந்நிறுவனம் இன்று தனது தனித்துவமான கலரில் ஸ்டெல்த் எடிசன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி ஸ்பீடு மாஸ்டர் ரெட் ஸ்டெல்த் எடிசன், பாபர் பர்பிள் ஸ்டெல்த் எடிசன், ஆகிய பைக்குகளும்,

triumph stealth editions launch

போனவில் டி100 ப்ளூ ஸ்டெல்த் எடிசன், போனவில் டி 120 ப்ளூ ஸ்டில் எடிஷன், ஸ்பீட் டிவின் 1200 ரெட் ஸ்டென்த் எடிசன், ஸ்பீடு டிவின் 900 கிரீன் ஸ்டெல்த் எடிசன், ஸ்கிரம்லர் 900 ஆரஞ்ச் ஸ்டெல்த் எடிசன் மற்றும் டி 120 பிளாக் ஸ்டெல்த் எடிசன் சில்வர் ஃபினிஷ் உடன் கூடியது. ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விலையை பொறுத்தவரை ரூபாய் 9.09 லட்சம் முதல் 12.85 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளன. இந்த பைக்குகளுக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. மற்றும் இதன் டெலிவரிகளும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஸ்பெஷல் எடிசன் பைக்குகளாக இருப்பதால் வெறும் ஓராண்டுக்கு மட்டுமே இந்த பைக்குகளை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

triumph stealth editions launch

இந்த ஸ்டென்த் எடிஷன் போர்ட்ஃபோலியோவில் மொத்தம் 8 பைக்குகள் உள்ளன. ஒவ்வொரு பைக்கும் தனது பெட்ரோல் டேங்கில் தனித்துவமான டிசைன் செய்யப்பட்டதாக இருக்கிறது. இவை அனைத்தும் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட ஃபினிஷ் கொண்ட விபத்து நிறங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. இவை ஒவ்வொரு லைட்டிங் கண்டிஷனிலும் ஒவ்வொரு விதமான கலரில் காட்சியளிக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்டென்த் எடிஷன் பைக்குகள் எல்லாமே இப்படியான தனித்துவமான கலர் தீம்களுடன் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட பைக்குகளாக வடிவமைக்கப்படும் பைக்குளாக உருவாக்கியுள்ளது. இந்த பைக்குகளுக்காக முதலில் தயார் செய்யப்படும் டேங்குகள் கையால் மிரர் பினிஷ் சில்வர் பேஸ் கோட் கொண்டு நிறம் ஏற்றப்படுகிறது. மேலே கிராபைட் விஜிநெட் கலர் அடிக்கப்படுகிறது.

triumph stealth editions launch

இதன்பின்பு லாகுவார் டாப் கோர்ட் என்ற பெயிண்ட் பல்வேறு லேயர்களாக அடிக்கப்பட்டு டீப் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் கலர் ஆப்ஷன் மட்டுமே சிறப்பு அம்சமாக இருக்கிறது. பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் மெக்கானிகளில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை. பழைய பைக்கில் உள்ள அதே மெக்கானிக்கல் அம்சம் தான் இந்த பைக்கிலும் இடம் பெறும். ஆனால் கலர் ஆப்ஷன் மட்டும் மாறுபடும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

பைக்குகள் விலையைப் பொறுத்தவரை ஸ்பீடு மாஸ்டர் ரெட் ஸ்டெல்த் எடிசன் ரூ12.85 லட்சம் என்ற விலையிலும், பாபர் பர்பிள் ஸ்டெல்த் எடிசன் ரூ12.85 லட்சம் என்ற விலையிலும், போனவில் டி100 ப்ளூ ஸ்டில்ஸ் எடிசன் ரூ10.29 லட்சம் என்ற விலையிலும், போனவில் டி120 எடிசன் ரூபாய் 11.89 லட்சம் என்ற விலையிலும், ஸ்பீடு டிவின் 1200 ரெட் ஸ்டெல்த் எடிசன் ரூ11.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இதுபோக ஸ்பீடு டிவின் 900 கிரீன் சேர்த்து எடிசன் ரூ9.09 லட்சம் என்ற விலையிலும், ஸ்கிரம்லர் 900 ஆரஞ்சு செலுத்து எடிசன் ரூ10.19 லட்சம் என்ற விலையிலும், போனவில் டி120 பிளாக் சேர்த்து எடிசன் ரூ11.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் 8 பைக்குகளை அறிமுகப்படுத்தி டிரையம் நிறுவனம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டிரையம் பைக்குகளுக்கு என்றே மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்கு இந்த பைக்குகள் எல்லாம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. பலர் இந்த பைக்குகளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த பைக்குகள் வருகை அவர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகளுக்கு புக்கிங் குவியும் என நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா பைக் வீக் என்று நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள பைக் விரும்பிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் டிரையம்ப் நிறுவனம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது ரசிகர்களை எளிதாக சென்றடையும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. டிரையம்ப் நிறுவனத்தின் இந்த முயற்சியை நாம் நிச்சயம் பாராட்டலாம். இந்த பைக்குகள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, December 8, 2023, 19:17 [IST]
English summary
Triumph stealth editions launch in india bike week 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X