இவ்வளவு விலை கொடுத்து பைக் வாங்குறவங்களும் இந்தியாவில் இருக்காங்களா? டிரையம்ப்பின் புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765

புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 (Triumph Street Triple 765) மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய டிரையம்ப பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் நிறுவனமான டிரையம்ப்பில் இருந்து இரு ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர்.எஸ் என்பவை அந்த இரு டிரையம்ப் பைக்குகளாகும். இதில் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.10.17 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

triumph street triple 765 r and rs launched

மறுப்பக்கம், ஆர்.எஸ் வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.81 லட்சம் ஆகும். உண்மையில், முன்பை விட டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்குகளின் தோற்றம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பைக்கை சுற்றிலும் ஏகப்பட்ட கூர்மையான பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப தொழிற்நுட்ப வசதிகள் அதிகரிக்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, என்ஜினும் கூடுதல் ஆற்றல்மிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் பைக்கில் 765சிசி இன்லைன் 3-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை ஓவர்ஹெட் மற்றும் சிலிண்டர் ஒன்றிற்கு 4 வால்வுகளை கொண்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்-இல் 118.4 பிஎச்பி மற்றும் 9,500 ஆர்பிஎம்-இல் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

triumph street triple 765 r and rs launched

இந்த என்ஜின் ஆற்றல் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக பைக்கின் பின் சக்கரத்திற்கு செல்கின்றன. அத்துடன், ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச்சும் இந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் பைக்கில் பொருத்தப்படும் அதே 765சிசி என்ஜின் தான் புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர்.எஸ் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், என்ஜின் மூலமாக கூடுதல் இயக்க ஆற்றல் கிடைக்கும்.

எந்த அளவிற்கு என்றால், 12,000 ஆர்பிஎம்-இல் 128.2 பிஎச்பி வரையில் கிடைக்கும். இருப்பினும், டார்க் திறனில் மாற்றமில்லை. அதேபோல் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்கின் இந்த ஆர்.எஸ் வெர்சனிலும் அதே 6-ஸ்பீடு கியர்பாக்ஸே கிடைக்கும். அலுமினியம் பீம் ட்வின் ஸ்பர் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரையம்ப் பைக்குகளில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 41மிமீ-இல் ஷோவாவின் தலைக்கீழான பெரிய பிஸ்டன் வழங்கப்பட்டுள்ளது.

triumph street triple 765 r and rs launched

பின்பக்க சஸ்பென்ஷன் செட்அப்பை பொறுத்தவரையில், ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர் பைக்கில் ஷோவா மோனோஷாக்கும், ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 ஆர்.எஸ் பைக்கில் ஹோலின்ஸ் எஸ்.டி.எக்ஸ் 40 மோனோஷாக்கும் கிடைக்கும். இந்த சஸ்பென்ஷன் அமைப்புகள் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவைகளாகும். பிரேக் பணியை கையாள இந்த இரு ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்குகளில் முன் சக்கரத்தில் 310மிமீ-இல் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வளவு விலைமிக்க டிரையம்ப் பைக்குகள் நம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது ஒன்றும் புதியது அல்ல. தற்போது இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 பைக்குகள் முன்பு விற்பனையில் இருந்த அவற்றின் முந்தைய தலைமுறைகளை காட்டிலும் சுமார் ரூ.50,000 வரையில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, June 16, 2023, 17:09 [IST]
English summary
Triumph street triple 765 r and rs bikes launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X