ரூ.2- 3 லட்சத்தில் புதுசா ஒரு டிரையம்ப் பைக்!! டெஸ்ட்டிங் எல்லாம் ஓகே... ஒரு சின்ன லோன் போட்டால் வாங்கிடலாம்!

டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 (Triumph Thruxton 400) என்ற பெயரை கொண்ட மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் ஆட்டோ ஸ்ட்ரீட்.இன் என்ற இணையத்தளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த 400சிசி டிரையம்ப் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியன் மார்க்கெட்டை இப்போதுதான் சரியாக புரிந்துக் கொண்டது போல், தொடர்ச்சியாக 400சிசி பைக்குகளை விற்பனைக்கு களமிறக்குகிறது. இந்த வரிசையில் 3வது 400சிசி டிரையம்ப் பைக்காக அடுத்ததாக த்ரக்ஸ்டன் 400 என்ற பெயர் கொண்ட கேஃப் ரேஸர் பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

triumph thruxton 400 spotted testing

டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 பைக் ஒன்று இந்தியாவில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதை வைத்துதான், இந்த பைக் இந்திய மார்க்கெட்டுக்கு வரலாம் என கூறுகிறோம். நம்பர் பிளேட் இல்லாமல், மறைப்புகள் எதுவுமின்றி இந்த பைக் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளதால், இந்த சோதனை ஓட்டம் ஏதேனும் மூடிய வளாகத்திற்குள் நடத்தப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் இந்த பைக் சோதனை செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இந்த சோதனை ஓட்ட படங்களில் டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 பைக்கின் தோற்றம் சற்று வித்தியாசமாக உள்ளது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் த்ரக்ஸ்டன் 400 பைக்கின் முன்பகுதி இன்னும் வளைவானதாக இருக்கும். ஆனால், படங்களில் காட்சித்தரும் இந்த பைக்கில் அந்த தலைக்கீழான 'C' வளைவு இன்னும் விரிந்த நிலையில் உள்ளது.

triumph thruxton 400 spotted testing

இதற்கேற்ப முன்பக்க ஹெட்லேம்ப் மற்றும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பாரின் வடிவம் மாற்றப்பட்டு உள்ளது. இத்தகைய ஹெட்லேம்ப் மற்றும் ஹேண்டில்பாரை டிரையம்ப் ஸ்பீடு டிரிபிள் ஆர்.ஆர் பைக்கில் பார்த்ததாக ஞாபகம். முன்பகுதியை தவிர்த்து, பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த, டிரையம்ப்பின் மற்றொரு 400சிசி பைக்கான ஸ்பீடு 400-இல் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன.

அதாவது, 17-இன்ச் சக்கரங்கள், முன்பக்க சஸ்பென்ஷன் யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்க மோனோஷாக் உள்ளிட்டவை அனைத்தும் ஸ்பீடு 400 பைக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்களில் பைக் முழுவதும் அறிமுகத்திற்கு தயாரான நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும், த்ரக்ஸ்டன் 400 பைக்கின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை.

triumph thruxton 400 spotted testing

டிரையம்ப் நிறுவனம் அதன் 400சிசி பைக்குகளில் அளவில் சற்று சிறியதான சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பொருத்துகிறது. புதிய த்ரக்ஸ்டன் 400 பைக்கிலும், ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகள் மூலம் டிரையம்ப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்முறையாக அறிமுகப்படுத்திய அதே 398.15சிசி சிங்கிள்-சிலிண்டர் டிஆர்-சீரிஸ் என்ஜின் தான் பொருத்தப்பட்டு உள்ளது.

லிக்யுடு-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய த்ரக்ஸ்டன் 400 பைக்கிற்காக இந்த என்ஜினை டிரையம்ப் நிறுவனம் மாடிஃபை செய்து வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

triumph thruxton 400 spotted testing

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் விலை குறைவான பைக்குகளுள் த்ரக்ஸ்டன் 400 ஒன்றாகும். ஆதலால், இந்த மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டிற்கு சரியானதாக இருக்கும் என டிரையம்ப் கருதுகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்பீடு 400 பைக்கில் இருந்து நிறைய பாகங்கள் அப்படியே வழங்கப்படுவதால், இந்தியாவில் த்ரக்ஸ்டன் பைக்கின் விலையை இன்னும் குறைவானதாக டிரையம்ப்பால் நிர்ணயிக்க முடியும்.

Image Courtesy: Autostreet.in

More from DriveSpark

Article Published On: Sunday, November 26, 2023, 7:00 [IST]
English summary
Triumph thruxton 400 cafe racer has been spotted testing check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X