டிடிஎஃப் விஷயத்தில் நோண்டி நொங்கெடுக்கும் தமிழக காவல்துறை! பல வருஷத்துக்கு அவருக்கு களிதான் போலிருக்கே!

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான யுட்யூபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர் ஆவார். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியே ஃபேமஸ் ஆனவர்களிலும் இவர் ஒருவராக திகழ்கின்றார். இந்த நபரே அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தபோது நிலை தடுமாறி சமீபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, வலது பக்க கை எலும்பு முறிவுற்றிருக்கின்றது. இது தவிர உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகளும் ஏற்பட்டன. இருப்பினும், அவரால் தற்போது நல்ல நிலையில் நடக்கவும், பேசவும் முடிகிறது. அவர் உயிர் இந்த விபத்தில் உயிர் தப்பியது மிகப் பெரிய ஆச்சரியம் என்கின்றனர்.

TTF vasan illegal helmet

விபத்திற்கு பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது பிறரின் உதவியின்றி அவர் அவராகவே நடந்துச் சென்றார். இத்தனைக்கும் அவர் சந்தித்தது மிகவும் மோசமான விபத்தாகும். இருப்பினும், இத்தகைய விபத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் தப்பி இருக்கின்றார். இதற்கு அவர் பயன்படுத்திய அதீத பாதுகாப்பை தரும் தலைக்கவசம் மற்றும் ரைடர் உடையுமே காரணமாக இருக்கின்றது.

இதில், அவர் பயன்படுத்திய ஹெல்மெட்டே அவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்திருக்கின்றது. ஏற்கனவே, அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியது, வாகனத்தில் ஸ்டண்ட் செய்தது மற்றும் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் பாய்ந்திருக்கின்றநிலையில், மேலும் சில வழக்குகளும் அவர் மீது பாயும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

அதற்கு அவர் பயன்படுத்திய ஹெல்மெட்டே காரணம் ஆகும். டிடிஎஃப் வாசன் இந்தியாவில் அனுமதிக்கப்படாத சட்ட விரோத ஹெல்மெட்டை பயன்படுத்தி இருக்கின்றார். இந்த ஹெல்மெட்டை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தே அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்தே தற்போது போலீஸார் டிடிஎஃப் வாசனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஐஎஸ்ஐ சான்று பெறாத ஹெல்மெட் விற்க மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. டிடிஎஃப் பயன்படுத்தி இருப்பது ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் ஆகும். மேலும், அது மிக மிக விலை உயர்ந்த ஹெல்மெட் என்றும் கூறப்படுகின்றது. ஏஜிவி பிராண்ட் ஹெல்மெட்டையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

இதுவே அவரை பெரும் விபத்தில் இருந்து உயர் காத்திருக்கின்றது. அதுமட்டும் இல்லைங்க, அந்த ஹெல்மெட்டிற்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இதனாலேயே போலீஸாருக்கு அந்த ஹெல்மெட் குறிந்து சந்தேகம் எழுந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே அந்த ஹெல்மெட் சட்ட விரோதமாக இந்தியா கொண்டு வரப்பட்டது தெரிய வந்திருக்கின்றது. நண்பர் வழியாகவே அவருக்கு கிடைத்திருக்கின்றது. இதுகுறித்த தீவிர விசாரணை டிடிஎஃப் வாசனிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஹெல்மெட்டின் விலை எப்படியும் 1.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்ட ஹெல்மெட்டையே இந்தியாவில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்து டிடிஎஃப் வாசன் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதற்காக அவர் தற்போது கூடுதல் சர்ச்சையிலும் சிக்கி இருக்கின்றார். ஏற்கனவே டிடிஎஃப் வாசனின் டிரைவிங் லைசென்ஸை பறிப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, தொடர் போக்குவரத்து விதிமீறல்களில் அவர் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் அவரை தற்போது சிறையில் அடைப்பதற்கான வேலையிலும் காவல்துறை களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே ஏழு நாள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சட்ட விரோத ஹெல்மெட் பயன்பாடு குறித்த வழக்கும் கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், அவர் ரெண்டு மூன்று வருசம் வெளியில் வருவதே சந்தேகம்தான் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகமாக பயணித்த டிடிஎஃப் வாசன் பிற வாகன ஓட்டிகளை கவரும் விதமாக தொடர்ச்சியாக தன்னுடைய விலையுயர்ந்த பைக்கில் ஸ்டண்டில் ஈடுபட்ட வண்ணம் வந்திருக்கின்றார்.

அவ்வாறு பைக் ஸ்டண்ட் செய்தபோதே அவர் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் ஸ்டண்டில் ஈடுபட்டபோது அந்த வழியில் யாரும் வரவில்லை. இதனால், உயிர் சேதம் ஏற்படாமல் இந்த விபத்து முடிவுற்றிருக்கின்றது. இதுபோன்று வாகன ஸ்டண்டுகளில் ஈடுபடுவதனாலேயே ஃபேமஸான நபராக அவர் மாறி இருக்கின்றார்.

இவரை ஃபாலோ செய்வதற்கு என்றே ஒரு மிகப் பெரிய 2கே கிட்ஸ் கூட்டம் இருக்கின்றது. இவர்களில் ஒரு சிலர் தங்களை சின்ன டிடிஎஃப் என கூறிக் கொண்டு வாகன ஸ்டண்டுகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பாடம் புகட்டும் விதமாகவே டிடிஎஃப்-ஐ தமிழக காவல்துறை தற்போது நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், டிடிஎஃப் வாசனின் ஃபாலோவர்கள் இனி வரும் காலங்களில் திருந்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிடிஎஃப் வாசன் இதுபோன்று விதிமீறல் செயல்களில் ஈடுபடுவது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் பலர் முறை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு இருக்கின்றார். குறிப்பாக, சமீபத்தில்கூட காரை ஓட்டி வந்து இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதுபோன்று தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் ஓர் நபரே டிடிஎஃப் வாசன் ஆவார். இதனாலேயே இவருக்கு எதிர்ப்புகள் மிக அதிகமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 19, 2023, 23:23 [IST]
English summary
Ttf vasan used an illegal helmet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+