பல்சர் 150 மார்க்கெட்டை சரிக்க போகும் புது அப்பாச்சி பைக்!! டிவிஎஸ் பார்த்து பார்த்து அப்டேட் செய்து இருக்கு!

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மோட்டார்சைக்கிள் கோவாவில் நடைபெறும் 2023 டிவிஎஸ் மோட்டோசோல் கண்காட்சியின் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மோட்டார்சைக்கிளில் புதியதாக பல்வேறு அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று அப்பாச்சி வரிசை பைக்குகள் ஆகும். பல்வேறு விதமான சிசி என்ஜின் உடன் அப்பாச்சி பைக்குகள் கிடைக்கின்றன. அவற்றுள், அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மோட்டார்சைக்கிளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

tvs apache rtr160 4v launched

டிவிஎஸ் மோட்டார் சார்பில் கோவாவில் நடத்தப்பட்டு வரும் 2023 மோட்டோசோல் கண்காட்சியில் 2024 அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,34,990 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, ஆர்டிஆர்160 4வி பைக்கிற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த விலையை விட கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் அதிகமாகும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் மிக முக்கிய அம்சமாக ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் (SmartXonnect) தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனரின் குரல் மூலமாக செயல்படும் இந்த அட்வான்ஸ்டு தகவல்தொடர்பு-உதவி தொழிற்நுட்பத்தின் மூலம் பைக்கில் பயணத்தின்போது வழிக்காட்டியை பெறலாம். அத்துடன், மொபைல் போனுக்கு அழைப்பு/ குறுஞ்செய்தி வந்தாலோ அதுகுறித்த அறிவிப்பு பைக்கின் திரையில் காட்டப்படும்.

tvs apache rtr160 4v launched

அதேபோல், வாகனம் எங்கேனும் மோதலுக்கு உள்ளாகினாலோ அல்லது அதிவேகமாக ஓட்டப்பட்டாலோ அதுகுறித்த தகவல்களை பைக்கின் உரிமையாளருக்கு தெரியப்படுத்திவிடும். பைக்கில் பெட்ரோலின் அளவு குறைவதையும் இந்த தொழிற்நுட்பம் எச்சரிக்கும். புதிய 2024 ஆர்டிஆர்160 4வி பைக்கில், தோற்றத்தில் பெரியதாக மாற்றமில்லை.

இருப்பினும், பைக்கின் முன்பக்கத்தில் டி.ஆர்.எல் உடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. பின் சக்கரத்தில் 240மிமீ-இல் பெரிய அளவில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் புதிய ஆர்டிஆர்160 4வி பைக்கில் இடம்பெற்றுள்ளது. முன்பை விட இந்த பைக்கின் எடை 2 கிலோ வரையில் குறைந்துள்ளது.

tvs apache rtr160 4v launched

அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் 159.7சிசி, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் புதிய ஆர்டிஆர்160 4வி பைக்கில் அதிகப்பட்சமாக 17.6 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. பவர்/எடை விகிதம் ஆனது 122 பிஎஸ்/டன் ஆகும்.

மழை, அர்பன் மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் எந்த மாற்றமும் இல்லை. டபுள் க்ராடல் ஸ்பிளிட் சின்ரோ ஃப்ரேமில் உருவாக்கப்படும் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜுக்கு பல்சர் போல, டிவிஎஸ் நிறுவனத்துக்கு அப்பாச்சி. இதனால்தான், எதை செய்கிறதோ இல்லையோ... அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. இந்த முறை, தொழிற்நுட்ப ரீதியாக அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆர்டிஆர்160 4வி பைக் மட்டுமின்றி ஓர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் 2023 மோட்டோசோல் கண்காட்சியில் டிவிஎஸ் வெளியீடு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 16:57 [IST]
English summary
Tvs apache rtr 160 4v launched at motosoul 2023 price features all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X