ரொம்ப கொடுத்து வெச்சவரு!! இந்தியாவிலேயே யாரிடமும் இந்த பைக் இல்லை - இவர்தான் ஃபர்ஸ்ட்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 (TVS Apache RTR310) மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளன. முதல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் உத்தர பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்பாச்சி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புத்தம் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், இந்த புதிய அப்பாச்சி பைக்கின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் முதல் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

tvs apache rtr310 deliveries starts

லக்னோவில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை முதல் வாடிக்கையாளர் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. புதிய ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிளை பொறுத்தவரையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளின் நேக்டு வெர்சன் இது ஆகும். அதாவது, பேனல்கள் அவ்வளவாக இல்லாத நேக்டு மோட்டார்சைக்கிள் இதுவாகும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.43 லட்சத்தில் இருந்து ரூ.2.64 லட்சம் வரையில் உள்ளன. விலையை பொறுத்தவரையில், ஆர்ஆர்310 பைக்கை விட ஆர்டிஆர்310 ஆனது விலை குறைவானதாக இருக்கலாம். ஆனால், தொழிற்நுட்ப அம்சங்களை ஆர்டிஆர்310-இல் டிவிஎஸ் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

tvs apache rtr310 deliveries starts

குறிப்பாக, ஆர்ஆர்310 பைக்கில் வழங்கப்படும் செங்குத்தான இன்ஸ்ட்ரூமெண்ட் திரைக்கு பதிலாக ஆர்டிஆர்310 பைக்கில் கிடைமட்டமான வடிவில் 5-இன்ச் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மூலமாக வாய்ஸ் அசிஸ்ட், ரேஸ் டெலிமேட்ரி, ரைடிங் மோட்களுக்கு வித்தியாசமான தீம்களை பெறலாம்.

இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் மற்ற முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், க்ரூஸ் கண்ட்ரோல், க்ளைட் த்ரூ டெக்னாலஜி, டைனாமிக் டெயில் லேம்ப் & ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை சொல்லலாம். புதிய ஆர்டிஆர்310 பைக்கை டைனாமிக் மற்றும் டைனாமிக் புரோ என 2 விதமான தொகுப்புகளில் வாங்கலாம். இதில், டைனாமிக் தொகுப்பில் முழு அட்ஜெஸ்டபிள் முன் & பின்பக்க சஸ்பென்ஷன், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் பிராஸ்-கோட்டட் செயின் உள்ளிட்டவை அடங்குகின்றன.

tvs apache rtr310 deliveries starts

அதுவே டைனாமிக் புரோ தொகுப்பின் மூலம் க்ளைமேட் கண்ட்ரோல் இருக்கை, டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம். இதில் டைனாமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டத்தின் மூலமாக கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், ஸ்லோப் டிபெண்டெண்ட் கண்ட்ரோல் மற்றும் ரியர் வீல் லிஃப்ட்-ஆஃப் கண்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் மாடர்ன் மோட்டார்சைக்கிளாக களமிறக்கப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கிற்கு ஒருவழியாக டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஆதலால், இனி அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை சாலையிலும் காண முடியும். ஏற்கனவே இந்த பைக்கை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு இது ஓர் மகிழ்ச்சியான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2023, 17:11 [IST]
English summary
Tvs apache rtr 310 deliveries starts in india here all details
மேலும்... #டிவிஎஸ் #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X