புத்தம் புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்!! இதற்காக தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்... விலை எவ்வளவு தெரியுமா?

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் புதிய நாக்டு ரக மோட்டார்சைக்கிளாக அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை தாய்லாந்தில் இருந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் விலை, என்ஜின் மற்றும் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

டிவிஎஸ் மோட்டார், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். டிவிஎஸ் மோட்டாரின் அடையாளமே அதன் அப்பாச்சி பைக்குகள் எனலாம். இதனாலேயே அப்பாச்சி பைக்குகள் வரிசையை மேலும் அதிகரிக்கும் முனைப்பில் டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த வகையில், புதியதாக அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

tvs apache rtr 310 launched

டிவிஎஸ் மோட்டார்ஸின் புதிய நாக்டு மோட்டார்சைக்கிளான ஆர்டிஆர்310 தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிவிஎஸ் மோட்டாரும், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனமும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இந்த கூட்டணியில் ஏற்கனவே பல்வேறு 310சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2,42,990 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலையில் குயிக் ஷிஃப்டர் வசதி இல்லாமல் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக் கிடைக்கும். மேலும் இந்த எக்ஸ்-ஷோரூம் விலையில் அர்செனால் கருப்பு நிறத்தில் பைக் கிடைக்கும்.

tvs apache rtr 310 launched

அதுவே, இதே அர்செனால் பெயிண்ட் நிற ஆப்ஷனில் குயிக் ஷிஃப்டர் வசதி உடன் ஆர்டிஆர்310 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,57,990 ஆகும். ஃப்யூரி மஞ்சள் நிறத்தில் பைக்கின் விலை ரூ.2,63,990 ஆகும். இவை இல்லாமல், செபாங் நீல நிற பெயிண்ட் ஆப்ஷனிலும் பைக் கிடைக்கும். இதற்கு நீங்கள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன், புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கை இரு விதமான ஆக்ஸஸரீ கிட் ஆப்ஷன்களில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

டைனாமிக் கிட் மற்றும் டைனாமிக் புரோ கிட் என்பவை அந்த இரு ஆக்ஸஸரீ கிட் ஆப்ஷன்கள் ஆகும். இதில் டைனாமிக் கிட் ஆப்ஷனின் விலை ரூ.18,000 ஆகவும், டைனாமிக் புரோ கிட் ஆப்ஷனின் விலை ரூ.22,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் 312.2சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் பிஎம்டபிள்யூவின் ஜி310 பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது.

tvs apache rtr 310 launched

ஆனால், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 மோட்டார்சைக்கிளுக்காக இந்த என்ஜின் சற்று கூடுதல் ஆற்றல் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்த புதிய அப்பாச்சி பைக்கில் அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 35 பிஎச்பி மற்றும் 6,650 ஆர்பிஎம்-இல் 28.7 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கியர்பாக்ஸ் ஆனது ஸ்லிப்பர் & அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை-டைரக்‌ஷ்னல் குயிக்‌ஷிஃப்டர் மூலமாக செயல்படக்கூடியதாக உள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கில் 0-60kmph வேகத்தை வெறும் 2.81 வினாடிகளில் எட்டிவிடலாம் என கூறும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு 150kmph என தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் செட்-அப்களும் வழங்கப்பட்டுள்ளன.

tvs apache rtr 310 launched

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் 17-இன்ச் ட்யூயல்-காம்பவுண்ட் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க, இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இவற்றுடன் கூடுதலாக ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. பாதுகாப்பிற்கு கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை பைக்கில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், பல்வேறு ரைடிங் மோட்கள் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் செட்அப்பை பெற்றுள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கில் பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாக்டு ரக பைக்குகளுக்கே உண்டான முரட்டுத்தனமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் அதற்கேற்ப கூர்மையான எட்ஜ்களை கொண்ட பெட்ரோல் டேங்க் பருத்த வடிவில் வழங்கப்பட்டு உள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட் அமைப்பு இரண்டாக பிரிக்கப்பட்டதாக உள்ளது.

tvs apache rtr 310 launched

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் என்றால் முரட்டுதனமான தோற்றத்தில் இருக்கும் என்பது தெரியும். ஆனால், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் இன்னும் கூடுதல் ரக்டு தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனால், இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக் விற்பனையில் பஜாஜ் டோமினார் 400 மற்றும் கேடிஎம் 390 ட்யூக் பைக்குகளுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 19:28 [IST]
English summary
Tvs apache rtr 310 launched price engine specifications
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X