ஓட்டி பார்த்தா சும்மா தாறுமாறு! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 வீடியோ ரிவியூ!
டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கை சமீபத்தில் தாய்லாந்து அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை ஓட்டி பார்த்த ரிவியூ செய்ய டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு டிவிஎஸ் நிறுவனத்திலிருந்து தாய்லாந்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி எங்கள் குழு தாய்லாந்து சென்று இந்த பைக்கை ஓட்டி பார்த்தது.
எங்கள் குழு தாய்லாந்து சென்று பைக்கை ஓட்டி பார்த்த அனுபவத்தை வீடியோ பதிவாக பதிவு செய்து அதை பார்வையாளர்கள்களான உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம். இதில் பைக் குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் பைக்கை ஓட்டி பார்த்தால் எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் அனைத்தையும் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு விமர்சகர் வேதாந்த் ஆங்கில மொழியில் உங்களுக்காக வழங்கியுள்ளார்.
இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் 312.2 சிசி ரிவர்ஸ் இன்கிளைன்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பைக்கிலும் பிஎம்டபிள்யூ ஜி310 என்ற பைக்குகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் 35 பிஎச்பி பவரையும் 28.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த பைக்கில் சில குறைகள் இருந்தாலும் பெரும்பாலும் சிறப்பான விஷயங்களை அதிகமாக இருக்கிறது. இந்த பைக் ஒரு ஸ்ட்ரீட் பைட்டர் பைக் என்பதால் சிட்டி மற்றும் டிராபிக் நிறைந்த பகுதிகள் மற்றும் மழை நேரங்களில் ஓட்டுவது சிறப்பாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பைக்கில் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








