செம்ம... டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் இப்படியொரு புதிய மாடலா!! ரோடு ஃபுல்லா இந்த பைக்கா தான் போக போகுது...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்310 (TVS Apache RTR310) மோட்டார்சைக்கிள் விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு அடையாளமே அதன் அப்பாச்சி பைக்குகள் தான் என சொல்ல வேண்டும். அதாவது, பஜாஜ் ஆட்டோவிற்கு பல்சர் எப்படியோ அதேபோன்றுதான் டிவிஎஸ் மோட்டாருக்கு அப்பாச்சி எனலாம். இதனாலேயே அப்பாச்சி பைக்குகள் வரிசையை விரிவுப்படுத்தும் முனைப்பில் டிவிஎஸ் மோட்டார் உள்ளது.

tvs apache rtr310 will be launched

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் 160சிசி என்ஜினில் இருந்து கிடைக்கின்றன. அதிகப்பட்சமாக 310சிசி வரையிலான என்ஜின் உடன் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைக்கு 310சிசி-இல் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் மட்டுமே விற்பனையில் உள்ளது. இந்த பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் காரணமாகவே, அப்பாச்சி ஆர்ஆர்310 போன்றதான 310சிசி பைக்குகள் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனது மற்றொரு புதிய 310சிசி பைக்காக அப்பாச்சி ஆர்டிஆர்310 மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. ஆர்டிஆர் பைக்குகள் அனைத்துமே நாக்டு ரக மோட்டார்சைக்கிள்களாகும்.

tvs apache rtr310 will be launched

அதாவது ஆர்டிஆர் பைக்குகளில் அவ்வளவாக பேனல்கள் பொருத்தப்படுவதில்லை. இதனால் புதிய ஆர்டிஆர்310 பைக்கையும் நாக்டு வெர்சனில் எதிர்பார்க்கிறோம். அதிக பேனல்களுடன் விற்பனை செய்யப்படும் ஆர்ஆர்310 பைக்கை காட்டிலும் புதிய ஆர்டிஆர்310 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை நிச்சயமாக குறைவாகவே நிர்ணயிக்கப்படும். தற்சமயம் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.5 லட்சமாக உள்ளது.

விலைகளில் வித்தியாசங்கள் இருப்பினும், பெரும்பான்மையான பாகங்களை இந்த புதிய அப்பாச்சி பைக் அதன் ஸ்போர்ட்ஸ் வெர்சனான ஆர்ஆர்310 பைக்கில் இருந்தே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆர்ஆர்310 பைக்கின் 312சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் புதிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கிலும் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 34 பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

tvs apache rtr310 will be launched

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் 'பில்டு டு ஆர்டர்' பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, ஆர்டர் வந்தால் தான் ஆர்ஆர்310 பைக் உருவாக்கப்படும். இதேபோன்றுதான் புதிய ஆர்டிஆர்310 பைக்கும் விற்பனை செய்யப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த புதிய அப்பாச்சி பைக்குகள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் தொழிற்சாலையில் தான் உருவாக்கப்படும் என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர்ஆர்310 பைக் சந்தையில் பிரபலமாக உள்ள நிலையில், அதன் நாக்டு வெர்சன் ஆர்டிஆர்310 என்ற பெயரில் கொண்டுவரப்படுவது உண்மையில் நல்ல விஷயமாகும். ஆனால் இந்த பைக்கை ஆர்ஆர்310 போல் அல்லாமல், தாராளமாக உற்பத்தி செய்தால், டெலிவிரிக்காக வாடிக்கையாளர்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்பது எங்களது கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 11:19 [IST]
English summary
Tvs apache rtr 310 will be launched coming soon
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X