100 கி.மீ வேகத்தை 1.8 நொடியில் பிக்கப் செய்யும் எலெக்ட்ரிக் பைக்! டிவிஎஸ் வெளியிட்ட அசத்தல் பைக்!
டிவிஎஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை கோவாவில் நடந்து வரும் டிவிஎஸ் மோட்டோ சோல் என்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை எலெக்ட்ரிக் ரேஸ் பைக்காக அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஇ என்ற பெயரில் இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மோகம் அதிகமாகி உள்ளது. பெட்ரோல் டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால் அனைவரும் எதிர்காலத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தான் செல்ல வேண்டும் என்ற முன்னெடுப்பை ஒவ்வொரு நாடும் எடுத்து வருகிறது. இதற்கு உதவி செய்யும் வகையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தங்கள் பயணத்தை கட்டமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஇ என்ற பெயரில் கோவாவில் நடந்து வரும் டிவிஎஸ் மோட்டோ சோல் என்ற நிகழ்வின் போது காட்சிப்படுத்தியது.
இந்த பைக் முழுவதுமாக ஒரு ரேஸ் பைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பைக் குறித்த ஒரு சில தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளன. ரோடில் பயன்படுத்தக்கூடிய பைக்காக இது கட்டமைக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த பைக் குறித்த முழுமையான தகவல்களை டிவிஎஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அடுத்தடுத்த அப்டேட்டுகளில் இந்த தகவல் எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது வெளியாகியுள்ள அப்டேட்டின் படி இந்த பைக்கில் பிளக்ஸ் எஸ் டிஎம் 550 டேஷ் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே இருக்கிறது. 25 ஹெட்ஸ் கண்கரண்ட் ஜி என் எஸ் மாடலில் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
100 ஹிட்ஸ் இன்டெர்னல் மெசர்மென்ட் யூனிட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக ஸ்மார்ட் அலாரம் வார்னிங், ip67 ரேட்டிங், இன்டர்மீடியட் உடன் கூடிய லேப் டைம், ஜிபிஎஸ் ஸ்பீட், ஜிபிஎஸ் டிராஜரி சர்வீஸ் ஆர்பிஎம் லீன் ஆங்கிள், லேட்டர்னல் மற்றும் லாங்கிடுடினல் ஆக்ஸிலரேஸன்ஸ் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த பைக் இந்த செக்மெண்டிலேயே அதிக ஏரோ டயனமிக்ஸ் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் சிமுலேஷன் கொண்டு இது கட்டமைக்கப்பட்டது. இந்த பைக்கின் பேட்டரி பேக்கை பொருத்தவரை இரண்டு விதமான பேட்டரி பேக்குகள் உள்ளன. நான்கு பிஎம்எஸ் ஸ்லேவ் மற்றும் இரண்டு பிஎம்எஸ் மாஸ்டர் ஆகியவை ஒரு பேட்டரி பேக்குகள் இடம்பெறும். ஐசோலேசன் மானிட்டரின் பிசிபி, ரிஜிட் கார்பன் பைபர் கேஸ் ஆகியன இந்த பேட்டரியில் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி தொடர்ந்து 300 ஆம்ஸ் பவரையும் அதிகபட்சமாக 450 ஆம்ஸ் பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மோட்டாராக ஆக்ஸியல் பிளக்ஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது லிக்யூட் கூலிங் சிஸ்டத்தில் இயங்கும் மோட்டாராக உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-யில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதிகபட்சமாக 500 விடிசி வால்டேஜை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 98 சதவீதம் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் சென்ட்ரல் அலுமினியம் பிரேம் மோட்டார் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷனை இணைக்கும் வகையிலும் முன் பக்க ஸ்டேரிங் சிஸ்டத்தையும் சஸ்பென்ஷனையும் இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி கேசும் மோட்டார் கேசும் வாகனத்தின் வடிவமைப்புக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்குகளும் சிமெண்ட்ரி பேட்டரி பேக்குகளாக ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் எளிதாக பேட்டரி ஸ்வாப் செய்ய முடியும்.
இந்த பைக்கில் 1390மிமீ வீல் பேஸ் இருக்கிறது. முன்பக்கம் பெராலி சூப்பர் கிராஸ் எஸ்சிஐ 110/70-17 டயரும், பின்பக்கம் பெராலி சூப்பர் கிளாஸ் எஸ் சி ஐ 140/70-17 டயரும் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் பிரம்போ 320 மீமி டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் பிரம்போ 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் ஓலிங் எஃப்ஜிஆர்டி 43 சஸ்பென்ஷனும் பின்பக்கம் ஓலிங் டிடிஎக்ஸ் 36 சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக் அதிகபட்சமாக 59 கிலோ வாட் பவரையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்சை பொறுத்தவரை சென்னை எம்ஐசி கிரவுண்டை 5 லேப் அடிக்கும் அளவிற்கு இதன் ரேஞ்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்ச வேகமாக மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்ஐ சிகிரவுண்டை பெட்ரோல் பைக்கை விட இந்த பைக் 3.1 நொடி முன்னதாகவே கம்ப்ளீட் செய்கிறது. நீளமான குவாட்டர் மைல் டிராக் நேரத்தை பொறுத்தவரை பெட்ரோல் பைக்கை விட இது 1.8 நொடி முன்னதாகவே கம்ப்ளீட் செய்கிறது. 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.8 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் ரேஸிங் வகைக்காக இந்த பைக்கை தயாரித்துள்ளதாக தெரிகிறது. இந்த பைக் மார்க்கெட்டிற்கு எப்பொழுது விற்பனைக்கு வரும் அளவிற்கு இந்த பைக் மாடிபிகேஷன் செய்யப்படுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இந்த பைக்கின் விலை குறித்த விபரங்களும் வெளியாகவில்லை. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









