நம்ம தமிழ்நாட்டு நிறுவனம்தான் ஃபர்ஸ்ட்! இந்தியால இருந்து வேற எந்த நிறுவனமும் அந்த நாட்டுல கால் தடம் பதிக்கல..

ஒட்டுமொத்த இந்தியாவையும் வாயை பிளக்கச் செய்யும் வகையில் தரமான சம்பவத்தை தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனம் செய்திருக்கின்றது. அது செய்திருக்கும் சம்பவம் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு வாகன உற்பத்தி நிறுவனமும் வெனிசுலா நாட்டில் கால் தடம் பதித்திராத நிலையில், முதல் முறையாக நம் நாட்டைச் சேர்ந்த அதுவும், நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அந்நாட்டில் கால் தடம் பதித்து இருக்கின்றது.

Tvs entered venezuela market

டிவிஎஸ் நிறுவனம்தான் அது. இந்த நிறுவனமே இந்தியாவின் முதல் நிறுவனமாக அந்நாட்டில் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. தன்னுடைய வருகை பதிவு செய்யும் விதமாக டிவிஎஸ் நிறுவனம், அதன் முன்னணி வாகன மாடல்களை வெனிசுலா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

மலிவு விலை ஸ்போர்ட்டி லுக் கொண்ட ரைடர் 125 தொடங்கி எக்ஸ்எல்100 மொபட் வரையில் பலதரப்பட்ட இருசக்கர வாகன மாடல்களை அது அந்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் டிராக் 150, ஸ்போர்ட் 100, எச்எல்எக்ஸ், ஸ்ட்ரைகர் மற்றும் என்டார்க் ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்களையே வெனிசுலா நாட்டில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இவற்றுடன், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 உட்பட அப்பாச்சி சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து பைக் மாடல்களும் அந்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கிங் ஜிஎஸ் மற்றும் கிங் கார்கோ ஆகிய மூன்று சக்கர வாகனங்களையும் வெனிசுலா நாட்டில் டிவிஎஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம் செயல் வெளிநாடுகளில் அதற்கு உள்ள செல்வாக்கை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே, நிறுவனம் தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவின் துணைக் கண்டங்கள், லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றில் அது வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுபோன்று 80க்கும் மேற்பட்ட நாடுகளில் டிவிஎஸ் தன்னுடைய வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த நாடுகளின் வரிசையில் தற்போது டிவிஎஸ் வெனிசுலாவையும் இணைத்துள்ளது. இதன் வருகையால், அந்நாட்டில் செயலாற்றி வரும் உள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் என கூறலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் மலிவு விலைக்கு பெயர்போனவையாக இருக்கின்றது. இதை முன்னிட்டே அவ்வாறு கூறப்படுகின்றது. இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சூப்பரான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டிவிஎஸ்-இன் இருசக்கர வாகனங்கள் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 3,00,493 யூனிட் விற்பனையாகி இருக்கின்றன.

இது சென்ற 2022 ஆம் ஆண்டு செப்டம்பரைக் காட்டிலும் 5.85 சதவீதம் அதிகம் விற்பனையாகும். நிறுவனம் நம்பர் செல்லிங் தயாரிப்பாக ஜுபிடர் ஸ்கூட்டரே இருக்கின்றது. இந்த ஒற்றை இருசக்கர வாகன மாடல் மட்டுமே சுமார் 83,130 யூனிட்டுகள் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன.

இதேமாதிரியான தரமான வரவேற்பே தற்போது நிறுவனம் கால் தடம் பதித்து இருக்கும் வெனிசுலா நாட்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டிவிஎஸ் ரைடருக்கு அந்நாட்டில் சூப்பரான டிமாண்ட் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இரண்டாவது பெஸ்ட் செல்லிங் டிவிஎஸ் தயாரிப்பாக அதுவே இருக்கின்றது. 2023 செப்டம்பரில் மட்டும் அது 48,753 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றது. இது சென்ற 2022 செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 123.99சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் தயாரிப்புகளுக்கு சமீப சில காலமாக நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே சூழலே உலக நாடுகள் சிலவற்றிலும் கிடைப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் தன்னுடைய தயாரிப்பை புதிய நாடாக வெனிசுலாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சீக்கிரமே இங்கு நம் தமிழகத்தின் வெற்றி கொடி பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 25, 2023, 21:22 [IST]
English summary
Tvs entered venezuela two wheeler market
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+