ஒரு டயரை மாத்தினதுக்கா இந்த டூ-வீலர்கள் இப்படி பறக்குது!.. டிவிஎஸ் யூரோகிரிப் ரோட்ஹவுண்ட் டயர் ரிவியூ வீடியோ!

டிவிஎஸ் டயர், வாகனங்களுக்கான டயர் உற்பத்தியில் களமிறங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. 2019 ஆம் ஆண்டே 'டிவிஎஸ் யூரோகிரிப்' (TVS Eurogrip) என நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பைக் மற்றும் ஸ்கூட்டர் என பலதரப்பட்ட வாகனங்களுக்கான டயர்களை இந்த நிறுவனம் உற்பத்திச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே நிறுவனம் பிரத்யேமாக இருசக்கர வாகனங்களுக்கான புதிய டயரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டிவிஎஸ் யூரோகிரிப் ரோடுஹவுண்ட் (TVS Eurogrip Roadhound) எனும் டயரையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது குவாட் காம்புவண்ட் ரேடியல் (quad compound radial) ரக டயர் ஆகும்.

இந்த டயர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையே நாங்கள் சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். டயரின் செயல் திறன் மற்றும் சிறப்புகளை ஆராயும் விதமாக எங்களின் இந்த பயணம் அமைந்தது. காரி மோட்டார் ஸ்பீடுவே (Kari Motor Speedway)-வில் வைத்தே எங்களின் சோதனையானது நடைபெற்றது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையே இந்த வீடியோவில் வழங்கி இருக்கின்றோம்.

Roadhound review video in tamil

முன் பக்க டயரைப் பொருத்த வரை ஒற்றை தேர்விலும், பின் பக்க டயரைப் பொருத்தவரை இரு விதமான ஆப்ஷன்களும் டிவிஎஸ் யூரோகிரிப் ரோடுஹவுண்டில் வழங்கப்படுகின்றது. முற்றிலும் பெர்ஃபார்மன்ஸ் டூ-வீலரை ரைடை மையமாகக் கொண்டே இந்த புதிய டயரை டிவிஎஸ் யூரோகிரிப் உருவாக்கி இருக்கின்றது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மழை நீரால் ஏற்படும் ஆக்குவா பிளானிங் ஆபத்து இந்த டயரில் தவிர்க்கப்படும் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 16:50 [IST]
English summary
Tvs eurogrip roadhound review video in tamil
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+