புதிய டிவிஎஸ் பைக்கின் பெயர் இதுதானா? இதுக்காகவே வாங்கலாம்! ராயல் என்பீல்டை ஒழிச்சு கட்ட கங்கணம் கட்டிட்டாங்க
டிவிஎஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக 313 சிசி இன்ஜின் கொண்ட புதிய பைக்கை களம் இறக்க உள்ளது. இந்த புதிய பைக்கிற்கான பெயரையும் பதிவு செய்துள்ளது. இந்த புதிய பைக்கின் பெயர் என்ன? இதன் அம்சங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. பெரும்பாலும் அப்பாச்சி ரக பைக்குகள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் அட்வெஞ்சர் செக்மெண்டிற்க்குள் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்க தற்போது முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்த செக்மெண்டில் ஹோண்டா சிபி 200 எக்ஸ், ஹீரோ எக்ஸ்பல்ஸ், சுஸூகி வி ஸ்ட்ரோம் எஸ் எக்ஸ் 250, ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன், கேடிஎம் அட்வெஞ்சர், பிஎம்டபிள்யூ ஜி 3 ஜிஎஸ் மற்றும் யெஸ்டி அட்வெஞ்சர் ஆகிய பைக்குகள் தற்போது விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் 313 சிசி இன்ஜின் திறன் கொண்ட புதிய பைக் ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் என்ற பெயரை டிரேட் மார்க் செய்துள்ளது. இந்த பைக் அட்வெஞ்சர் பைக்குகளை விரும்புபவர்களை குறி வைத்து வடிவமைக்கப்படுகிறது.

இந்த பைக்கில் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் தலைகீழாக வைக்கப்பட்ட ஃபோர்க்கள், பின்பக்கம் ஃப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முழுவதுமாக எல்இடி லைட் வழங்கப்படும் என தெரிகிறது.
இது போக இந்த பைக்கில் உள்ள டிஸ்ப்ளேவில் ஆர்பிஎம், மைலேஜ், ப்யூயல் கொள்ளளவு, கியர் பொசிஷன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது போக முக்கியமாக இந்த பைக்கில் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி அம்சம் இடம்பெறும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை டிவிஎஸ் நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ 3 முதல் 3.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இந்த பைக் விற்பனைக்கு வந்தால் இது மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும். ஏற்கனவே அப்பாச்சி என்ற பெயருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கும் நிலையில் இந்த பைக் சிறப்பான கவனத்தை பெறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபகாலமாக இந்திய மக்கள் மத்தியில் அட்வெஞ்சர் ரக பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வார்கள் மற்றும் ஆஃப் -ரோடிங் அம்சங்களை விரும்புவர்கள் இந்த ரக பைக்கை விரும்புகின்றனர். இதில் தற்போது டிவிஎஸ் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









