மின்சார பைக்கை போல ரேஞ்ஜ் தரும் டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஆட்டோ! இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், ஐக்யூப் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் வாயிலாக இந்திய மின்சார இருசக்கர வாகன உலகில் தன்னுடைய மிக சூப்பரான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, மூன்று சக்கர மின்சார வாகன பிரிவிலும் தன்னுடைய மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவதற்கான முயற்சியில் டிவிஎஸ் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

இதன் அடிப்படையில், நிறுவனம் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவிற்கான பேடண்ட்-ஐ அது நாட்டில் பதிவு செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த ஆட்டோ ரிக்ஷோ டிவிஎஸ் கிங் (TVS King) எனும் பெயரில் சந்தையைக் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TVS king electric rickshaw design

இவ்வாறே பேடண்ட் பதிவின் ஆவணங்களும் நமக்கு தெரியப்படுத்துகின்றன. மேலும், இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை தற்போது விற்பனையில் இருக்கும் முன்னணி பிரீமியம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு இணையானதாக டிவிஎஸ் தயார் செய்ய இருப்பதும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக டிவிஎஸ் கிங் இருக்கும் என நம்பப்படுகின்றது.

இந்தியாவில் மூன்று சக்கர வாகன பிரிவில் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் முன்னணி பிராண்டுகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கான மிக சிறந்த போட்டியாளரே நம்ம டிவிஎஸ் தான். இந்த நிலையிலேயே போட்டியை மேலும் வலுக்கச் செய்யும் விதமாக அது எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றது.

இந்தியாவிலும் மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது மிக முக்கியமாக டெலிவரி பிரிவில் மின்சார ஆட்டோக்களுக்கு செம்ம டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் டெலிவரி சேவையில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

இதேபோல், தமிழகம் போன்ற சில மாநில அரசாங்கங்கள் பொது சேவையில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை அதிகளவில் பன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் நிறுவனத்தின் கிங் பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. இந்த ஆட்டோ பயணிகள் ஆட்டோவாக மட்டுமின்றி கார்கோ ஆட்டோவாகவும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

டிரேட்மார்க் பதிவும் இந்த இரண்டிற்காகவே செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆகையால், என்ன மாதிரியான மோட்டார் இதில் பயன்படுத்தப்பட இருக்கின்றது? இதன் ரேஞ்ஜ் திறன் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை துள்ளியமாக வழங்க முடியவில்லை.

இருப்பினும், புதிதாக உருவாக்கப்பட்டு வருகம் டிவிஎஸ் கிங் ஓர் முழு சார்ஜில் 200 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இதேபோல், பிரீமியம் அம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ பலரின் வாயை பிளக்கச் செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்த விபரத்தையும் டிவிஎஸ் இதுவரை உறுதி செய்யவில்லை. விரைவில் இதுபற்றி தகவல்கள் அனைத்தும் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் கை தேர்ந்த நிறுவனமாக மாறி இருக்கின்றது. நிறுவனத்தின் ஒரே ஒரு மின் வாகன தயாரிப்பாக ஐக்யூப் இருக்கின்றது. இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே டிவிஎஸ்-ஐ கை தேர்ந்த மின் வாகன உற்பத்தியாளர் என கூற மிக சிறந்த சான்றாக உள்ளது. இந்த வாகனத்தைப் போலவே கிங்-கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 5:00 [IST]
English summary
Tvs filed patents for king electric auto rickshaw here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+