சம்பாதித்த பெரும் தொகையை சிங்கப்பூர் நிறுவனத்தில் கொட்டும் டிவிஎஸ்.. இதனால இந்தியால என்ன நடக்கபோகுது தெரியுமா?

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பை மேற்கொண்டு வரும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஐஓஎன் மொபிலிட்டி (Ion Mobility). இந்த நிறுவனத்திலேயே தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS) பெரும் தொகையை முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் தன்னுடைய மின் வாகன உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த முதலீட்டை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ்

வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையபோகுது

இந்த முதலீடு ஐயோன் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் விதமாகவும் செய்யப்பட்டு உள்ளது. ஐயோன் ஓர் ஸ்டார்ட்-அப் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்தியாவின் ஏத்தர் எனெர்ஜியைப் போன்று சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் சிறிய நிறுவனமே ஐயோன் ஆகும். இதன் வளர்ச்சிக்கு உதவும் விதமாக தனது பெரும் முதலீட்டை டிவிஎஸ் செய்திருக்கின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் விற்பனைக்கு வரபோகுது

இந்த நிறுவனம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிறுவனமாக இருக்கின்றது. சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் 2019 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் மின்சாரத்தை சேகரிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தன்னுடைய இந்த பணியை அனைத்து தென்-கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்வதே மிக முக்கியமான இலக்காக உள்ளது.

உலகளவில் தன்னுடைய இருப்பை வெளிக்காட்ட டிவிஎஸ்-இன் முயற்சி

நிறுவனத்தின் இலக்கிற்கு உதவிக் கரம் நீட்டும் வகையிலேயே டிவிஎஸ்-இன் முதலீடு அமைந்து இருக்கின்றது. நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய இருப்பை உலகளாவிய அளவில் விரிவுப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. இதற்காக நிலையான மற்றும் சிறிய பிராண்டுகளுடன் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அது கூறியது. இந்த நிலையிலேயே முதலீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

மொபியுஸ் எம்எஸ்-1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த முதலீட்டின் வாயிலாக அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உலக அளவில் டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் இந்தியாவிலும் ஐயோன் நிறுவனத்தின் நிறுவனத்தின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடலாக மொபியுஸ் எம்எஸ்-1 இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மேக்ஸி ஸ்டைலில் இதனை நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

பெட்ரோல் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும்

இந்த வாகனத்தில் 12.5 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரையே ஐயோன் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த திறன் 16.7 பிஎச்பி பவருக்கு இணையானது. இத்துடன், 43 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். "இந்த திறன்களை வைத்து பார்க்கையில் பெட்ரோல் டூ-வீலருக்கே டஃப் கொடுக்கும் வேகத்தில் மொபியுஸ் எம்எஸ்-1 மின்சார ஸ்கூட்டர் ஓடும் போலிருக்கே என நினைக்குறீங்களா"... சந்தேகமே வேண்டாம், இது சூப்பரான வேகத்தில் செல்லும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.7 செகண்டுகளிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் மிக்க வாகனமாகவே மொபியுஸ் எம்எஸ்-1 மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இதன் ரேஞ்ஜ் திறன் அதிகமாக உள்ளது. ஓர் முழு சார்ஜில் 150 கிமீ வரையில் அது பயணிக்கும் என இயோன் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

இதற்காக 3.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமான எண்ணிக்கையில் ஐயோன் நிறுவனம் மொபியுஸ் எம்எஸ்-1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. 7 அங்குல டிஎஃப்டி திரை, சாவியே இல்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் அம்சம், எல்இடி டிஆர்எல்கள், 26 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ் வசதி (இருக்கைக்கு அடியில்), 14 அங்குல அலாய் வீல்கள் என எக்கசக்க அம்சங்களை மிக தாராளமாக வாரி வழங்கி இருக்கின்றது, ஐயோன். இந்த மாதிரியான வாகனத்தையே டிவிஎஸ் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்கிற சூழல் அதன் முதலீட்டு செயல்பாட்டால் உருவாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 3, 2023, 16:50 [IST]
English summary
Tvs invests in ion mobility
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+