ஒத்த மாடலை வச்சுட்டு எல்லாரு கண்ணுலையும் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் டிவிஎஸ்.. இவ்ளோ சேல்ஸ் ஆகிருச்சா!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ், நாட்டின் மின்சார இருசக்கர வாகன பிரிவில் ஐக்யூப் எனும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கே இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தற்போது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1.50 லட்சம் யூனிட்டுகள் டிவிஎஸ் ஐக்யூப் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விற்பனைக்கு வந்து ஒட்டுமொத்தமாகவே 43 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் இந்த பிரமாண்ட விற்பனை எண்ணிக்கையை டிவிஎஸ் ஐக்யூப் எட்டி இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2020 ஜனவரியிலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tvs iqube electric scooter sale hit 1.5 lakh milestone

22 ஜூலை 2023 அன்றைய தேதி நிலவரப்படியே 154,263 யூனிட்டுகள் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. தற்போது இந்த விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஜுன் மாத முடிவின்படி 147,309 யூனிட்டுகள் மட்டுமே ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தற்போது 154,263 யூனிட்டுகளாக வரை தற்போது விற்பனைச் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக விற்பனை எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வந்ததன் விளைவாக இந்த சூப்பரான விற்பனை வளர்ச்சியை டிவிஎஸ் ஐக்யூப் எட்டி இருக்கின்றது.

Tvs iqube side design

ஐக்யூப்பிற்கு தற்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த சூப்பரான டிமாண்டிற்கு அந்த வாகனம் அதிக சிறப்பு வசதிகள் கொண்டிருப்பது மட்டுமல்ல அதன்மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கையும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் இப்போதைய நிலவரப்படி இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 1.41 லட்சம் ஆகும்.

இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. டிஆர்எல் உடன் கூடிய ஸ்மார்ட் எல்இடி ஹெட்லைட், ஃபாஸ்ட் சார்ஜிங், எச்எம்ஐ கன்ட்ரோல்லர், 32 லிட்டர் ஸ்டோரேஜ் (ஒரே நேரத்தில் ரெண்டு ஹெல்மெட்டுகளைக்கூட வைத்துக் கொள்ள முடியும்), 7 அங்குல பன்முக வசதிகள் கொண்ட தொடுதிரை என ஏகப்பட்ட சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றது.

Tvs iqube front design

இதுதவிர ஓர் முழு சார்ஜில் 100 கிமீ பயணிக்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் ஐக்யூப் இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ ஆகும். இந்த சூப்பர் வேக திறனுக்காக 4.4 kW திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பேட்டரி பேக்கை பொருத்த வரை 3.04 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். இதுதவிர டெலிஸ்கோபிக் மற்றும் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ட்வின் ட்யூப் ஷாக் அப்சார்பர் போன்றவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் ஓர் புதுமுக மற்றும் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்கள் சில, நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனில் எக்ஸ்எல் மொபட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதுதவிர மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு தேவை அதிகரித்தும் வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது விலை குறைவான மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எல் இவி ஆகியவற்றை களமிறக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. ஆகையால், விரைவில் இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன பிரிவையும் டிவிஎஸ் ஆளுகைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 31, 2023, 12:30 [IST]
English summary
Tvs iqube electric scooter hits 1 50 lakh sales milestone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X