இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்போதே வாங்கியிருக்கலாம்!! இனி இந்த விலைகளில் தான் வாங்க முடியும்...

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகளை உயர்த்தியுள்ளது. அத்துடன், இதற்கேற்ப ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் லாயலிட்டி சிறப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் கிடைக்கும் சவுகரியம் என்ன? ஐக்யூப்பின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

மத்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கிவரும் மானியத்தை இந்த ஜூன் மாதம் முதல் குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த மானியம் குறைப்பால் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருவதால், இத்தகைய வாகனங்களின் விற்பனை இந்த ஜூன் மாதத்தில் இருந்து வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tvs iqube e-scooter price hiked

ஏனெனில் ஓலாவில் இருந்து பஜாஜ் வரையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை தயாரிப்பவை அவற்றின் வாகனங்களின் விலைகளை சுமார் ரூ.20,000 வரையில் கூட உயர்த்தி கொண்டுள்ளன. இந்த வரிசையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப்பின் விலைகளை கணிசமாக உயர்த்தி உள்ளது. ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ஐக்யூப்பின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.1,16,184 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1,23,184 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஐக்யூப் எஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,28,849இல் இருந்து ரூ.9,440 அதிகரிக்கப்பட்டு ரூ.1,38,289 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2023 மே 21ஆம் தேதியில் இருந்து ஐக்யூப் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு விலைகள் ரூ.1,23,184 மற்றும் ரூ.1,38,289 ஆகும்.

tvs iqube e-scooter price hiked

இருப்பினும் இந்த விலை உயர்வை சமாளிக்கும் முயற்சியாக, ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லாயலிட்டி பெனிஃபிட் திட்டத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி ஐக்யூப் வாடிக்கையாளர்கள் சில பல சலுகைகளை பெற முடியும். ஆனால் இந்த திட்டம் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த லாயலிட்டி திட்டத்தை பற்றி மேலும் அறிய டிவிஎஸ் மோட்டாரின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தையோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தையோ அணுகவும். 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆரம்பத்தில் பெங்களூருவிலும், டெல்லியிலும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று நமது சென்னை உள்பட மொத்தம் 140 நகரங்களில் ஐக்யூப் கிடைக்கிறது.

tvs iqube e-scooter price hiked

இதற்கிடையில் சமீபத்தில், ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆண்டில் வாங்கியவர்களுக்கு ரீ-ஃபண்ட் வழங்கப்படுவதாக அறிவித்து, இதற்காக பெரிய தொகையை டிவிஎஸ் ஒதுக்கியது. இவை சார்ஜர்களுக்காக தவறுதலாக வாங்கப்பட்ட தொகை ஆகும். இதன்படி கடந்த 2022இல் ஐக்யூப்பை வாங்கியவர்கள் ரூ.1,700 வரையில் ரீ-ஃபண்ட்டை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் ஃபேம் திட்டத்தில் இந்த விதி உள்ளதை அடுத்து கட்டணத்தை திரும்ப வழங்க டிவிஎஸ் ஒப்புக்கொண்டது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இதில் வாடிக்கையாளர்கள் முழுவதுமாக பாதிப்படாத வண்ணம் சலுகைகளை வழங்கக்கூடிய லாயலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பது டிவிஎஸ் மோட்டாரின் பெருந்தன்மையை காட்டுகிறது. ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் ரூ.7 ஆயிரம் - ரூ.9,500 வரையில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 17:15 [IST]
English summary
Tvs iqube electric scooter price hiked new loyalty programme introduced
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X