ஜெயிச்சுட்டோம் மாறா... விற்பனையில் கொல-மாஸ் காட்டும் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உருவெடுத்திருக்கின்றது. இந்த நிறுவனம் ஐக்யூப் எனும் ஒற்றை மின்சார இருசக்கர வாகன மாடலை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கே இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 2023 மார்ச் மாதத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. பிப்ரவரியிலும் இதேபோல் அதிக விற்பனையை டிவிஎஸ் ஐக்யூப் எட்டியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. 15,522 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதைக் காட்டிலும் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே 2022 மார்ச் மாத விற்பனை இருக்கின்றது.

TVS iQube FY2023 sales

இருப்பினும் வரவேற்க தக்க விற்பனையாகவே உள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக மிக மோசமாக இருந்தது. உதாரணமாக மார்ச் 2022 இல் 1,799 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த நிலையிலேயே ஒரு வருடத்திற்குள்ளாக, அதாவது, 2023 மார்ச்சில் ஐக்யூப் ஸ்கூட்டரின் விற்பனை 15,364 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றன.

இத்தகைய வரவேற்பிற்கு அந்த ஸ்கூட்டரின் தரமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரியான அமோக வரவேற்பின் காரணமாக ஆண்டு விற்பனையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 2022-23 நிதியாண்டில் இதன் விற்பனை 1,08,550 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப்பிற்குக் கிடைத்திருக்கும் இந்த அதீத விற்பனை வளர்ச்சி போட்டி நிறுவனங்களை நடுங்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

TVS iQube FY2023 sales

குறிப்பாக, நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அடுத்து வரும் காலங்களிலும் அதிகரிப்பதற்கான சூழலே நிலவுகின்றது. இதுவே போட்டி நிறுவனங்கள் கலக்கமடைய காரணமாக இருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகியைவே அந்த தேர்வுகள் ஆகும்.

ஐக்யூப் தேர்விற்கு ரூ. 1.14 லட்சமும், ஐக்யூப் எஸ் தேர்விற்கு ரூ. 1.21 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஐக்யூப் எஸ்டி தேர்விற்கான விற்பனை சென்னையில் தொடங்கவில்லை. ஆகையால், இதன் விலை விபரம் தெளிவாக கூற முடியவில்லை.

TVS iQube FY2023 sales

அதேவேளையில், அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய தேர்வாக ஐக்யூப் எஸ்டி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 145 கிமீ ரேஞ்ஜ் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ ஆகும். மேலும், இதனை 4 மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும்.

இத்தகைய சூப்பரான பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனத்தின் விற்பனையையே இன்னும் விற்பனைக்குக் கொண்டு வராமல் டிவிஎஸ் நிறுவனம் இழுத்தடிப்புச் செய்துக் கொண்டிருக்கின்றது. இது அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனம் மட்டுமல்ல அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்டதும்கூட. நவீன கால அம்சங்கள் பல கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

TVS iQube FY2023 sales

அந்தவகையில், இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் அளவிலான பெரிய இட வசதி, ப்ளூடூத் இணைப்பு, கிளவுட் இணைப்பு, லைவ் டிராக்கிங், நோடிஃபிகேஷன், ஆன்டி தெஃப்ட் அலராம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 7 அங்குல தொடுதிரை, 5 வே ஜாய் ஸ்டிக், அலெக்ஸா உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் ஐக்யூபில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்து வரும் மாதங்களிலும் விற்பனை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அடுத்தடுத்து என இன்னும் ஒரு சில வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது. எலெக்ட்ரிக் மற்றும் ஐசிஇ என பிரிவிலும் புதுமுக வாகனங்கள் விற்பநைக்குக் களமிறங்க இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 15:19 [IST]
English summary
Tvs iqube electric scooter reaches 1 lakh unit sales milestone
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X