ஓலா இருந்தும் டிவிஎஸ்ஸால எப்படி இந்த சம்பவத்தை செய்ய முடிஞ்சுது? தமிழ்நாட்டு நிறுவனம் கெத்து காட்டிருச்சுங்க!
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிவிஎஸ்-ம் ஒன்றாகும். தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இந்த இந்த நிறுவனம் இந்தியாவின் மின்வாகன ஊக்குவிப்பு முயற்சியில் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் விதமாக ஐக்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே தற்போதைய நிலவரப்படி டிவிஎஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. வெகு விரைவில் இன்னும் சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை அவர்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கான அறிகுறிகள் மிக பலமாக தெரிகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கி இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லையே டிவிஎஸ் ஐக்யூப் எட்டி இருக்கின்றது.
கடந்த ஜூலை மாதத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.50 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை எட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது கூடுதலாக 50 ஆயிரம் யூனிட் விற்பனையை எட்டி ஒட்டுமொத்தமாக 2 லட்சம் யூனிட் விற்பனையை எட்டி இருக்கின்றது.

இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் முதன் முதலில் 2020ம் ஆண்டிலேயே ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே மூன்றாண்டுகள் நிறைவுறக் கூடிய தருணத்தில் அது அசாத்தியமான விற்பனைச் சாதனையைப் படைத்திருக்கின்றது.
ஆரம்பத்தில் என்னமோ இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரிய அளவில் விற்பனை வரவேற்புக் கிடைக்கவில்லை என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய தகவலாக இருக்கின்றது. மந்த நிலையிலேயே இதன் விற்பனை இருந்தது. சொல்லப்போனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 100க்கும் குறைவான யூனிட்டே விற்பனையாகின.
இந்த அளவு குறைவான விற்பனையைப் பெற்று வந்த ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே தற்போது மாதம் ஒன்றிற்கே 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகத் தொடங்கி இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகியவையே அவை ஆகும்.
ஐக்யூப் தேர்விற்கு ரூ. 1.41 லட்சமும், ஐக்யூப் எஸ் தேர்விற்கு ரூ. 1.56 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஐக்யூப் எஸ்டி தேர்விற்கான புக்கிங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐக்யூப் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் தரும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ ஆகும். மேலும், இதனை 4 மணி நேரம் 30 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். அதேவேளையில், ரேஞ்ஜ், சார்ஜ் வேகம் மற்றும் வேகத்திறன் கொண்டதே ஐக்யூப் எஸ் தேர்வு ஆகும்.
சிறப்பம்சங்களாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏகப்பட்ட பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 32 லிட்டர் அளவிலான பெரிய இட வசதி, ப்ளூடூத் இணைப்பு, கிளவுட் இணைப்பு, லைவ் டிராக்கிங், நோடிஃபிகேஷன், ஆன்டி தெஃப்ட் அலராம் உள்ளிட்ட அம்சங்களே டிவிஎஸ் ஐக்யூப்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, 7 அங்குல தொடுதிரை, 5 வே ஜாய் ஸ்டிக், அலெக்ஸா உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த அம்சங்களே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே மூன்று ஆண்டுகள் நிறைவுறுவதற்குள் அதனால் 2 லட்சம் யூனிட் விற்பனையை எட்ட முடிந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஓலா எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்களின் தயாரிப்புகள் மட்டுமல்ல ஏத்தர் எனெர்ஜி போன்ற பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








