பிஎம்டபிள்யூவின் அடிமடியிலேயே கை வைக்க திட்டம்! டிவிஎஸ் செய்யப்போகும் சூப்பரான சம்பவம்..

தமிழகத்தை மையமாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிக் கொண்டு இருக்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமே டிவிஎஸ். இந்த நிறுவனம் தற்போதைய நிலவரப்படி ஐக்யூப் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல நிலையில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் இருசக்கர வாகனங்களை விரும்பிகள் மத்தியில் டிவிஎஸ் ஐ-க்யூபிற்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் நிறுவனம் விரைவில் மற்றுமொரு புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tvs ev launch

அந்த வாகனம் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் சிஇ 02 இ-வாகனத்தைத் தழுவியதாக இருக்கும் என தெரிய வந்திருக்கின்றது. மிக சமீபத்திலேயே இந்த வாகனத்தை பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் வெளியீடு செய்தது. ஓர் முழு சார்ஜில் இந்த வாகனம் 90 கிமீ ரேஞ்ஜ் தரும்.

இதற்காக 2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதனால், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இதுதவிர இந்த வாகனத்தின் பே-லோட் 119 கிலோ கிராமாக இருக்கின்றது.

Bmw ce 02 side profile

இத்தகைய சூப்பரான மொபட்டை உற்பத்தி செய்ய பிஎம்டபிள்யூ மோட்டாராட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே டிவிஎஸ்-ம் அதன் புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியர்களுக்காக தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுகமே விரைவில் நம் நாட்டில் அரங்கேறவும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று இந்த புத்தம் புதிய இ-வாகனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, நிறுவனம் பிஎம்டபிள்யூ இ-வாகன தயாரிப்பு தளத்தைப் பயன்படுத்தி எலெக்ட்ரிக் மொபட் ரக எலெக்ட்ரிக் டூ-வீலரையே தயாரிக்க இருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் டிவிஎஸ் நிறுவனம் அதன் எக்ஸ்எல்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றதோ என்கிற சந்தேகத்தை நம் மத்தியில் எழுப்பி இருக்கின்றது. டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்த இரு நிறுவனங்களும் கூட்டணியின் கீழ் செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த கூட்டணியின்கீழே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இ-வாகனத்தை தளத்தை பயன்படுத்தி புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் டிவிஎஸ் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. எக்ஸ்எல் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது.

எளிய மக்கள் பலரின் பிரியமான வாகனமாக இந்த வாகனமே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பலரின் முக்கிய வாகனமாக எக்ஸ்எல் காட்சியளிக்கின்றது. இதற்கு மின் வாகன அவதாரத்தை டிவிஎஸ் நிறுவனம் வழங்கும்பட்சத்தில் அது உண்மையில் ஓர் நெகிழ்ச்சியான செயலாக மாறும்.

டிவிஎஸ் எக்ஸ்எல் மின்சார வாகனமாக மாற்றப்படும் எனில் அது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ சிஇ09 வாகனத்தை தழுவிய வாகனமாகவே இருக்கும். கணிசமான பிரீமியம் தர அம்சங்களையும் அதில் எதிர்பார்க்கலாம். டிஜிட்டல் திரை, ஸ்பெஷல் அலங்கார கூறுகள் ஆகியவற்றை அதில் எதிர்பார்க்கலாம். இதுதவிர, 80-100 கிமீட்டர் ரேஞ்ஜ் திறனையும் அதில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ச்சியாக டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே டிவிஎஸ்-இன் மின் வாகன உற்பத்தி தளத்தை பயன்படுத்தி டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த தகவல் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 10:07 [IST]
English summary
Tvs is launching a new vehicle on august 23
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+